ராஜஸ்தானில் மிக்-21 போர் விமானம் விபத்து: விமானி பலி
பார்மர்: ராஜஸ்தானில் மிக்-21 பைசன் ரக போர் விமானம் விபத்துக்குள்ளானதில் விமானி பரிதாபமாக உயிர் இழந்தார்.
ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில் உள்ள உத்தர்லாய் விமானதளத்தில் இருந்து மிக் 21 பைசன் ரக போர் விமானம் இன்று காலை பயிற்சிக்கு புறப்பட்டது. விமானம் காலை 9.30 மணிக்கு தரையிறங்க முயன்றபோது ஓடுதளத்தில் விபத்துக்குள்ளானது. இதில் விமானி பலியானார் என்று இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கர்னல் எஸ்.டி. கோஸ்வாமி தெரிவித்துள்ளார். கடந்த மாதம் மிக் 21 ரக விமானம் இதே உத்தர்லாய் விமான தளத்தில் விபத்துக்குள்ளானது. அப்போது விமானிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தநர். மிக் 21 ரக விமானங்கள் சுமார் 40 ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இலகு ரக போர்விமானங்கள் வரும் வரை வரும் 2018-2019ம் ஆண்டு வரை மிக் 21 ரக விமானங்கள் பயன்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.
40 ஆண்டுகளில் இந்திய விமானப்படையில் 900 மிக் 21 ரக விமானங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு மட்டும் 2 மிக் 21 ரக விமானங்கள், மிக் -29, மிக்-27, எஸ்யூ-30எம்கேஐ மற்றும் எம்ஐ-17வி5 ஆகிய ரக விமானங்களில் தலா ஒன்றும் விபத்துக்குள்ளாகின என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications