பெட்ரோல் விலை உயர்வு சாமானிய மக்களின் பொருளாதாரத்தை சுரண்டும் செயல்: ராமதாஸ்
சென்னை: பெட்ரோல் விலை உயர்வை வாபஸ் பெறுவதுடன் எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பெட்ரோல் மீதான விலை நிர்ணய உரிமையை ரத்து செய்து, மத்திய அரசே அதை தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
பெட்ரோல் விலை உயர்வு என்ற பெயரில் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மீது மீண்டும் ஓர் இடி இறக்கப்பட்டிருக்கிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துவிட்டது; இந்திய ரூபாய்க்கு எதிரான அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்துவிட்டது என்று கூறி பெட்ரோல் விலையை மத்திய அரசு லிட்டருக்கு ரூ.1.55 உயர்த்தியுள்ளது. உள்ளூர் வரிகளுடன் சேர்த்து சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.1.95 அதிகரித்திருக்கிறது.
இது கடந்த ஒன்றரை மாதத்தில் செய்யப்பட்டுள்ள நான்காவது விலை உயர்வு ஆகும். கடந்த மே மாதம் 30 ஆம் தேதி ரூ.65.90 ஆக இருந்த ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை இப்போது ரூ.73.60 ஆக உயர்ந்துள்ளது. ஒன்றரை மாதங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.7.70 உயர்த்தப்பட்ட கொடுமை இதுவரை நடந்ததில்லை. ஏற்கனவே அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்திருப்பதால், அன்றாட செலவுகளை சமாளிக்க முடியாமல் மக்கள் மூச்சுமுட்டிக் கொண்டிருக்கும் நிலையில், பெட்ரோல் விலை மேலும் ரூ.1.95 உயர்த்தப்பட்டிருப்பது சாமானிய மக்களின் பொருளாதாரத்தை சுரண்டும் செயலாகும்.
வெளிச்சந்தையில் ஏற்படும் பாதிப்புகள் மக்களைத் தாக்காமல் பார்த்துக்கொள்வது தான் ஓர் அரசின் கடமை ஆகும். ஆனால் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், உலக சந்தையை காரணம் காட்டி, பெட்ரோல் விலையை மத்திய அரசு தொடர்ந்து உயர்த்திக் கொண்டே சென்றால் அரசுக்கும், லாபம் ஒன்றையே குறிக்கோளாக கொண்ட தனியார் நிறுவனங்களுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும்.
எனவே, ஏழை மற்றும் நடுத்தர மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, பெட்ரோல் விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும். அதுமட்டுமின்றி, எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பெட்ரோல் மீதான விலை நிர்ணய உரிமையை ரத்து செய்து, மத்திய அரசே அதை தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications