முந்தானையை நழுவவிட்டு பிக் பாக்கெட் அடிக்கும் பெண்கள்.. ஆண்களே ரொம்ப ஜாக்கிரதை
சென்னை: சென்னை மாநகரப் பேருந்துகளில் பிக் பாக்கெட் அடிக்கும் பெண்கள் அதிகரித்து விட்டனராம். ஆண்களாக இருந்தால் கவர்ச்சி காட்டியும், பெண்களாக இருந்தால் அன்பொழுகப் பேசியும் திசை திருப்பி பிக் பாக்கெட் அடிக்கிறார்களாம்.
பேருந்துகளில் பயணம் செய்யும்போது மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று காவல்துறையினர் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளனர்.
ஆண்களுக்கு நிகராக இப்போது பெண்களும் பிக்பாக்கெட், மோசடிகளில் கலக்கி வருகின்றனர். அந்த வகையில் இப்போது சென்னை நகர அரசுப் பேருந்துகளில் பிக்பாகெட் திருடிகள் அதிகரித்து விட்டனராம்.

இதுவே தொழில்
இந்தப் பெண்களுக்கு பிக்பாக்கெட் அடிப்பதுதான் தொழிலே.

கும்பலாக செயல்படுகிறார்கள்
இந்தப் பெண்கள் ஒரு கும்பலாக இணைந்து செயல்படுகின்றனர். ஆளுக்கு ஒரு ஏரியாவைப் பிரித்து பஸ்களில் ஏறி காலை முதல் மாலை வரை பிக்பாக்கெட்டில் தீவிரமாக ஈடுபடுகின்றனர்.

யாருமே லோக்கல் கிடையாது
இந்தப் பெண்கள் யாருக்குமே சென்னை சொந்த ஊர் கிடையாது. மாறாக வெளியூர்களிலிருந்து இங்கு வந்து திருடிச் சென்று வருகிறார்கள்.

ரயில் நிலையத்தில் நைட் டேரா
இரவு நேரங்களில் ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்களில் பஸ்சுக்காக, ரயிலுக்காக காத்திருக்கும் பயணிகள் போல நடித்து தூங்கிக் கொண்டு காலையில் பிக்பாக்கெட் அடிக்க கிளம்பி விடுவார்களாம்.

கை நிறையக் காசு.. பஸ்சைப் பிடி ஊருக்கு
கை நிறையக் காசு சேர்ந்ததும் சொந்த ஊருக்குப் போய் விடுவார்களாம். பிறகு மீண்டும் திரும்பி வந்து வேட்டையைத் தொடருவார்களாம்.

முந்தானையை நழுவ விட்டு
இவர்கள் பிக்பாக்கெட் அடிக்கும் டெக்னிக்கே தனி.. பஸ்களில் ஏற வேண்டியது. நல்ல ஆண் மூஞ்சியாக பார்க்க வேண்டியது. அருகே போய் நின்று முந்தானையை வேண்டும் என்றே நழுவ விட்டு அந்த ஆணின் கவனத்தை திசை திருப்ப வேண்டியது. ஒரு பெண் இப்படி கவர்ச்சி காட்டிக் கொண்டிருக்க, அவருடன் வந்த இன்னொரு பெண் அந்த ஆணின் பர்ஸை திருடி விடுவாராம். வேலை முடிந்ததும் முந்தானையை சரி செய்து கொண்டு போய் விடுவார்களாம்.

இடிப்பது.. உரசுவது...
அதேபோல ஆண்களுக்கு அருகில் நின்று கொண்டு முன்பக்கம் அவரது முதுகிலோ அல்லது கையிலோ இடிப்பது போல நிற்பது, உரசுவது என்றும் சில்மிஷம் செய்து ஆண்களின் சபல புத்தியை தட்டி விட்டு பர்ஸ், நகை உள்ளிட்டவற்றை அடிப்பார்களாம்.

பெண்களின் பாசப் பேச்சு
இதுவே பெண்களாக இருந்தால், குறி்ப்பாக வயதான பெண்களாக இருந்தால் அன்பொழுக பேசியும், பாசம் காட்டுவது போல நடித்தும் திருடுவார்களாம்.

போனா போனதுதான்
இப்படிப்பட்ட கொள்ளைக்காரிகள் வெளியூர்களைச் சேர்ந்தவர்களாக இருப்பதால் இவர்களைப் பிடிக்க முடியாமல் போலீஸார் திணறுகின்றனர். எனவே பொதுமக்கள்தான் மிகுந்த கவனத்துடன் பயணிக்க வேண்டும் என்றும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
எனவே ஆண்களே, அடுத்த முறை எந்தப் பெண்ணாவது உங்களை உரசினாலோ அல்லது இடித்தாலோ அல்லது கவர்ச்சி காட்டினாலோ பல்லைக் காட்டிக் கொண்டு நிற்காமல் பர்ஸைப் பிடிச்சுக்குங்க.. கெட்டியா.
-
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications