அதிக வட்டி தருவதாக கூறி 115 சவரன் நகைகளை மக்களிடமிருந்து வாங்கி ஏமாற்றிய வி.ஏ.ஓ. அருள்தேவி
காஞ்சிபுரம்: வீடு கட்டிக் கொண்டிருக்கிறேன். பணம் தேவைப்படுகிறது. பணமோ நகையோ தாருங்கள். அதை அதிக வட்டியுடன் திருப்பித் தருகிறேன் என்று கூறி கிராம மக்களிடமிருந்து 115 பவுன் நகைகள் மற்றும் பெருமளவில் பணத்தை வாங்கிக் கொண்டு மோசடி செய்த பெண் கிராம நிர்வாக அலுவலரை போலீஸார் கைது செய்தனர்.
ஸ்ரீபெரும்புதுர் அருகே உள்ள கோட்டூர் கிராம நிர்வாக அலுவலராக இருப்பவர் அருள்தேவி. கணவர் இல்லை. இவர் கோட்டூர் மக்களிடம் தான் வீடு கட்டிக் கொண்டிருப்பதாகவும், பணம் தேவைப்படுவதாகவும் கூறியுள்ளார். மேலும் நகையோ அல்லது பணமோ கொடுத்தால் அதை அதிக வட்டியுடன் திருப்பிக் கொடுப்பதாகவும் கூறியிருந்தார்.
அருள்தேவியே கேட்கிறாரே என்று கிராம மக்கள் பலரும் நகை, பணத்தைக் கொடுத்துள்ளனர். ஆனால் வட்டியும் தரவில்லை. வாங்கிய பணம், நகையையும் திருப்பித் தரவில்லை அருள்தேவி.
இதையடுத்து போலீஸில் புகார் கொடுத்தனர் மக்கள். போலீஸார் வழக்குப் பதிவு செய்து அருள்தேவியைக் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் 115 பவுன் நகைகளையும், பணத்தையும் வாங்கி மோசடி செய்தது தெரிய வந்தது.
தற்போது அருள்தேவி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications