புதுவையில் இன்று முதல் காலவரையற்ற லாரி ஸ்டிரைக்: காய்கறி விலை உயரும் அபாயம்

புதுவை மேட்டுப்பாளையத்தில் கடந்த 2007ம் ஆண்டு போக்குவரத்து நகர் அமைக்கப்பட்டது. அங்கு லாரிகளை நிறுத்த போதிய வசதி இல்லை. இதையடுத்து போக்குவரத்து நகரில் அலுவலகம் மற்றும் சரக்கு பெட்ட வசதி, லாரிகளை நிறுத்த போதிய இடம் கோரி புதுவை லாரி உரிமையாளர்கள், முகவர்கள், டிரான்ஸ்போர்டர்கள் போராட்ட ஒருங்கிணைப்பு குழுவின் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இருப்பினும் அவர்களின் கோரிக்கை இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இதையடுத்து அவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தனர். அவர்களின் போராட்டத்திற்கு அகில இந்திய தென்மாநில லாரி உரிமையாளர்கள் சங்கம், தமிழ்நாடு தரைவழி போக்குவரத்து கூட்டமைப்பு ஆகியவை ஆதரவு தெரிவித்துள்ளன.
முன்னதாக புதுவைக்கு சரக்கு லாரிகளை அனுப்பி வைப்பதற்கான புக்கிங் நேற்று முன்தினம் முதலே நிறுத்தப்பட்டது. இது தவிர வெளிமாநிலங்களில் இருந்து புதுவைக்கு லாரிகளை இயக்கப்போவதில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தினமும் புதுவைக்கு வந்து செல்லும் 1000க்கும் மேற்பட்ட லாரிகள் இயக்கப்படவில்லை.
காலவரையற்ற வேலைநிறுத்தம் இன்று காலை 6 மணிக்கு துவங்கியது. காலை 6 மணிக்கு முன் வந்த லாரிகள் புதுவைக்குள் அனுமதிக்கப்பட்டன. ஆனால் 6 மணிக்கு மேல் வந்த லாரிகள் புதுவை எல்லையில் நிறுத்தப்பட்டன. இந்த லாரிகள் வேலை நிறுத்தத்தால் காய்கறி விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த போராட்டத்தால் நாள் ஒன்றுக்கு ரூ.50 கோடி மதிப்புடைய வர்த்தகம் பாதிக்கப்படும் என்று லாரிகள் உரிமையாளர்கள் சங்க தலைவர் கேசவன் தெரிவித்துள்ளார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications