இளவரசன் விவகாரத்தில் பாமகவை சிலுவையில் அறைந்தவர்கள் பாவங்களை சுமப்பார்களா?: ராமதாஸ்

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தர்மபுரி நத்தம் காலனியைச் சேர்ந்த இளவரசனின் இரண்டாவது உடற்கூறு ஆய்வறிக்கையை டெல்லி அனைத்திந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். இளவரசன் கொலை செய்யப்படவில்லை என்றும், அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் என்றும், அவரது உடலில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக ஆல்கஹால் கலந்திருப்பதால், அவர் அளவுக்கு அதிகமாக மது அருந்தியிருக்கலாம் என்றும் உடற்கூறு ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.
ஆனால், அரசியல் ஆதாயம் தேட வேண்டும் என்ற எண்ணத்தில், இளவரசன் தற்கொலை குறித்த செய்தி வெளியானதுமே, அதன் பின்னணியில் நடந்தது என்ன? என்பதைப் பற்றியெல்லாம் ஆராயாமல், இதற்கெல்லாம் காரணம் பாட்டாளி மக்கள் கட்சி தான் என்று தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கட்சிகள் குற்றஞ்சாற்றி சிலுவையில் அறைந்தன. இளவரசன் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று ஒரு தரப்பினரும், இளவரசனையும், திவ்யாவையும் பாட்டாளி மக்கள் கட்சியினர் பிரித்ததால் தான் இளவரசன் தற்கொலை செய்து கொண்டதாக இன்னொரு தரப்பினரும் வதந்திகளை பரப்பினர். ஆனால், உண்மை இப்போது அம்பலத்திற்கு வந்துவிட்டது.
இளவரசனின் மரணத்தில் அரசியல் உள்நோக்கத்துடன் பாட்டாளி மக்கள் கட்சியை சிலுவையில் அறைந்தவர்கள் அதற்கான பாவத்தை சுமப்பார்களா? என்பது தான் நான் எழுப்ப விரும்பும் வினா ஆகும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications