இளவரசன் மரணம் தற்கொலை தான்: டெல்லி ஏய்ம்ஸ் மருத்துவர்கள் குழு உறுதி
சென்னை: தமிழகத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கிய தர்மபுரி இளவரசன் மரணம், தற்கொலை தான் என்று டெல்லி ஏய்ம்ஸ் மருத்துவர்கள் குழு உறுதிபடுத்தியுள்ளது.
தர்மபுரி காதல் ஜோடி திவ்யா இளவரசன் விவகாரத்தில் பெரும் திருப்பமாக கடந்த 4ம் தேதி இளவரசன் ரயில் தண்டவாளம் அருகே பிணமாக கிடந்தார். இளவரசன் ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரெணும் அவரை கொலை செய்து விட்டார்களா என்ற சந்தேக அலை தமிழகம் முழுவதும் எழுந்தது.

இளவரசன் மரணம் குறித்த உண்மை நிலையை அறிய டெல்லியில் உள்ள ஏய்ம்ஸ் மருத்துவமனையின் புகழ் பெற்ற மருத்துவர்கள் குழுவை கொண்டு பிரேதப்பரிசோதனை செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனை தொடர்ந்து டெல்லி ஏய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் இளவரசனின் உடலை பிரிசோதனை செய்து, உயர்நீதி மன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர். இந்த அறிக்கையின் நகழ் தர்மபுரி கோர்ட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அந்த மருத்துவ பரிசோதனை அறிக்கை விபரம் தற்போது வெளியாகி உள்ளது. அதில் இளவரசன் ஓடும் ரயிலில் விழுந்து அடிபட்டு தலை, கைகளில் பலத்த காயம் ஏற்பட்டு இறந்துள்ளார் என்று கூறப்பட்டுள்ளது. அவரை யாரும் ரயிலில் தள்ளிவிட்டோ அல்லது துன்புறுத்தியோ கொன்றதற்கான எந்தவித மூகாந்திரமும் இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் இளவரசனின் மரணம் தற்கொலை தான் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இளவரசன் மரணம் குறித்து விசாரித்து வரும் தனிப்படை போலீசார் பிரேதப்பரிசோதனை அறிக்கையை நீதிமன்றத்தில் மனு செய்து வாங்க உள்ளனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications