என்னை மன்னிப்பீர்களா..?: ட்வீட்டர் மூலம் ‘பாவ மன்னிப்பு’ வழங்கும் போப்
Subscribe to Oneindia Tamil
வாடிகன்: இனி, வாடிகனில் இருந்தபடியே, உலக மக்களுக்கு ட்வீட்டர் மூலமும் பாவமன்னிப்பு வழங்க இருக்கிறாராம் போப்பாண்டவர்.
நவீன காலத்திற்கு ஏற்ப உலகில் அனைத்து விசயங்களுமே இயந்திரமயமாதல் ஆவது இயற்கையின் விதி என்று தான் சொல்ல வேண்டும்.

இதற்கு முன் வேறு எந்த போப்பாண்டவரும் செய்திடாத ஒன்றை தற்போதைய போப்பாண்டவரான பிரான்சிஸ் செய்திருக்கிறார். அதாவது ட்வீட்டர் மூலம் அவர் இனி பாவ மன்னிப்பு வழங்க இருக்கிறாராம்.
ரேடியோ, டிவி போல் சமூக வலைதளங்கள் மூலமாகவும் மக்களைத் தொடர்பு கொள்ள முடிவதால், பிரார்த்தனைகள் மற்றும் பாவமன்னிப்பு போன்ற நிகழ்ச்சிகளை தவற விடும் மக்களுக்காக இந்தப் புதிய வசதி அமல் படுத்தப்பட இருப்பதாக வாடிகன் செய்தித்தொடர்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications