For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

’பிருந்தா காரத்திடம் இருந்து குஜராத் பாடம் கற்க தேவையில்லை’

By Mathi
Google Oneindia Tamil News

Gujarat not need lessons from Brinda Karat
அகமதாபாத்: சமூக வளர்ச்சி பற்றி மூத்த மார்க்சிஸ்ட் தலைவர் பிருந்தா காரத்திடம் இருந்து குஜராத் அரசு பாடம் கற்க தேவையில்லை என்று அம்மாநில முதல்வர் மோடியின் ஆதரவாளர்கள் விமர்சித்துள்ளனர்.

குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை பிருந்தா காரத் தொடர்ந்து விமர்சித்து வரும் நிலையில் மோடியின் ஆதரவாளர்கள் வெளியிட்டுள்ள கட்டுரை ஒன்றில், எப்போது பார்த்தாலும் குஜராத் கலவரம் பற்றியே பேசுகிறார் பிருந்தா காரத். இந்த நாட்டில் வேறு எந்த ஒரு கலவரமும் நடக்கவே இல்லையா? 1984ஆம் ஆண்டு டெல்லியில் நடந்த சீக்கியர்கள் மீதான வன்முறையில் உயிரிழந்தோரும் கூட மனிதர்கள்தானே!

இர்ஷத் ஜஹான் வழக்கைப் பொறுத்தவரையில் சிறப்பு புலனாய்வுக் குழுவின் அறிக்கையில் தெளிவாகவே மோடிக்கும் அதற்கும் தொடர்பு இல்லை என சொல்லப்பட்டுவிட்டது.. ஆனாலும் தொடர்ந்தும் அதைபற்றியே பிருந்தா காரத் பேசுகிறார். குஜராத் கலவரம் பற்றி பேசுகிறவர்கள் கைவிடப்பட்டிருந்த கரசேவகர்களின் உடல்களைப் பற்றி கவலைப்பட்டது இல்லையே?

பிருந்தா காரத் போன்ற அரசியல்வாதிகளிடம் இருந்து சமூக வளர்ச்சிக்கான திட்டங்களை குஜராத் கற்றுக் கொள்ள வேண்டியதில்லை.. 34 ஆண்டு காலமாக மேற்குவங்கத்தில் மார்க்சிஸ்ட் அரசு நடைமுறைப்படுத்திய திட்டங்களையா இந்த நாடு இப்போது விரும்புகிறது? 34 ஆண்டுகால மேற்கு வங்க ஆட்சியில் மனித வள மேம்பாடு அடைந்துவிட்டது என்று அவர்களால் பெருமிதம் கொள்ள முடியுமா?

கேரள மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கட்சியினராலேயே அதே கட்சியைச் சேர்ந்த டி.பி.சந்திரசேகர் போன்றவர்கள் கொல்லப்பட்டார்களே அதற்கெல்லாம் சிபிஐ விசாரணையை பிருந்தா காரத் கோருவாரா? என்று அதில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது

English summary
Gujarat Chief Minister Narnendra Modi's supporters condemn CPM leader Brinda Karat and ask “Gujarat does not need lessons from Brinda Karat out of all people on social development. Does nation want the Left model of development that ruined Bengal for 34 years?" in an article.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X