மும்பையில் ஃபிளாட் வாங்குவதற்குப் பேசாமல் சென்னையில் ஒரு ஏக்கர் நிலம் வாங்கிடலாம்!
மும்பை: மும்பையில் நிலம் மற்றும் வீட்டின் விலை விண்ணைத் தொட்டு ரொம்ப காலமாகிறது. தற்போது அங்கு ரியல் எஸ்டேட்டில் மேலும் ஒரு புதிய விலை உயர்வு சாதனை படைக்கப்பட்டுள்ளது.
ஒர்லி பகுதியில் ஒரு ஃபிளாட்டின் விலை ஒரு சதுர அடிக்கு ரூ. 1.23 லட்சம் விற்று புதிய வரலாறு படைத்துள்ளது.
நாட்டிலேயே அதிகபட்சமான விலை இதுதான் என்று ரியல் எஸ்டேட் தொழிலில் இருப்பவர்கள் கூறுகிறார்கள்.

கடலை நோக்கி
கடலை நோக்கி இந்த அடுக்குமாடிக் குடியிருப்பு அமைந்துள்ளது. மொத்தம் 28 தளங்களாகும்.

சமுத்திர மஹால்
இந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் பெயர் சமுத்திர மஹால் என்பதாகும். இங்குதான் ஒரு சதுர அடி ஃபிளாட் ரூ. 1.23 லட்சம் என்று வி்ற்றுள்ளது.

பணத்தைக் கொட்டிய போரோசில்
பிரபல போரோசில் கண்ணாடி நிறுவனம் இந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒரு வீட்டை ரூ. 21 கோடிக்கு வாங்கியுள்ளது. வீட்டின் அளவு 1706 சதுர அடி பரப்பளவிலான 3 பெட்ரூம் வீடாகும்.

சைரஸ் பூனாவாலாவிடமிருந்து
உலகின் முக்கியமான பந்தயக் குதிரை உரிமையாளரும், மருந்து தயாரிப்புத் தொழிலில் ஈடுபட்டுள்ளவருமான சைரஸ் பூனாவாலாவின் மைத்துனி பெஹரோஸ் சவராய் பூனாவாலாவிடமிருந்து போரோசில் இந்த வீட்டை வாங்கியுள்ளது.

போன மாதம் ஒரு வீடு
போன மாதம்தான் இதே குடியிருப்பில் இன்னொரு வீட்டை வாங்கியிருந்தது போரோசில்.

10வது மாடியில்
தற்போது வாங்கப்பட்டுள்ள வீடு 10வது மாடியில் உள்ளது. இதன் கட்டுமான பரப்பளவு 2625 சதுர அடியாகும். வேலையாட்களுக்காக தனியாக ஒரு குவார்ட்டர்ஸும் இதில் உண்டு.

மெகா மனிதர்களின் குருவிக் கூடு
இந்த அடுக்கு மாடிக் குடியி்ருப்பில் பெரும் பெரும் தொழிலதிபர்கள், சில ராஜ குடும்பத்தினர் உள்ளிட்ட மெகா மனிதர்கள்தான் வசித்து வருகின்றனர்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications