74 அடியை தொட்டது மேட்டூர் அணை நீர்மட்டம்! ஆடி 18க்கு முன் அணை திறக்கப்படுமா?

கர்நாடகாவின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கணமழை காரணமாக அங்குள்ள கபிணி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது.
இதனால் அணைகளின் பாதுகாப்பு கருதி உபரி நீர் வெளியேற்றப்பட்டது. காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டதை அடுத்து வற்றிப் போன மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.
20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வற்றிப்போன மேட்டூர் அணையின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்து தற்போது 74.14 அடியாக உயர்ந்துள்ளது.
தற்போது அணைக்கு வினாடிக்கு 13 ஆயிரத்து 530 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரத்து 800 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பாசனத்திற்காக ஆண்டுதோறும் ஜூன் 12ம் தேதியன்று மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். கடந்த ஆண்டு பருவமழை பொய்த்துப் போனதால் செப்டம்பர் மாதம்தான் திறக்கப்பட்டது.
இந்த ஆண்டு பருவமழை நன்றாக பெய்வதால் அணை நிரம்பி வருகிறது. எனவே ஆடிப்பெருக்கு திருவிழாவிற்கு முன்பாக அதாவது ஆகஸ்ட் 3ம் தேதிக்கு முன்னதாக அணை திறக்கப்பட வேண்டும் என்று காவிரி டெல்டா பாசன பகுதி மக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
அணை திறந்து காவிரியில் நீர் வரத்து இருந்தால் மட்டுமே இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு திருவிழா சிறப்பாக கொண்டாட முடியும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications