தவறான தகவல்கள்: இங்கிலாந்தில் 'கொக்ககோலா' விளம்பரத்திற்கு தடை

Subscribe to Oneindia Tamil

லண்டன்: கொக்ககோலா விளம்பரம் மக்களிடையே தவறான தகவல்களை பரப்புகிறது என்று கூறி அதை ஒளிபரப்ப தடை இங்கிலாந்தில் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் டிவியில் ஒளிபரப்பாகும் கொக்கோலா விளம்பரத்தில் 75 விநாடிகள் வாய்விட்டு சிரித்தால் 139 கலோரிகள் எரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தில் கூறப்படும் தகவல் பொய்யானது என்று தெரிவித்து அதை ஒளிபரப்ப விளம்பர தர ஆணையம் தடை விதித்துள்ளது. ஆனால் இந்த குற்றச்சாட்டை கொக்ககோலா நிறுவனம் மறுத்துள்ளது. விளம்பரத்தில் கொக்ககோலா கேனை காண்பித்து அதன் அருகே 139 ஹேப்பி கலோரிகள் என்று கூறப்பட்டுள்ளது. இதை பார்ப்பவர்கள் ஒரு கேன் கொக்ககோலா குடித்தால் 139 கலோரிகள் எரிக்கப்படுகிறது என்று தவறாக புரிந்து கொள்ளும் வகையில் அந்த விளம்பரம் உள்ளது.

Coke ad banned in England for misleading exercise claims

இது குறித்து கொக்ககோலா நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,

39 மில்லியன் மக்கள் இந்த விளம்பரத்தை பார்த்துள்ளனர். அதில் வெறும் 10 பேர் தான் இது குறித்து எங்களை தொடர்பு கொண்டனர். மக்கள் கலோரிகளை எப்படி எரிக்க முடியும் என்பதை அவர்களுக்கு தெரிவிக்கும் நோக்கத்தில் தான் இந்த விளம்பரம் எடுக்கப்பட்டது. உடல் பருமன்பிரச்சனை அதிகரித்து வரும் நிலையில் இந்த தகவல் மக்களுக்கு மிகவும் தேவை என்று நினைத்தோம் என்றார்.

கொக்ககோலா விளம்பரத்தில் தவறான தகவல்கள் தெரிவிக்கப்பபடுவதாக டிவி விளம்பரத்தை பார்த்தவர்கள் புகார் கொடுத்தனர். இதையடுத்து தான் அந்த விளம்பரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+