106 வாட்டி திருமணம் செய்து அமெரிக்க தம்பதி புதிய உலக சாதனை
நியூயார்க்: அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு ஜோடி இதுவரை 106 முறை திருமணம் செய்து புதிய உலக சாதனை படைத்துள்ளனர்.
அமெரிக்காவில் உள்ள டென்னிஸியைச் சேர்ந்தவர்கள் டேவிட் பிளேர், லாரன் பிளேர் தம்பதி. டேவிட் லாரனை கடந்த 1982ம் ஆண்டு ஹாலிவுட்டில் உள்ள யூனிவர்சல் ஸ்டுடியோஸில் முதன்முதலாக பார்த்தார். பின்னர் லாரனிடம் திருமணம் செய்து கொள்ளலாமா என்று கேட்டதற்கு அவர் முதலில் மறுத்துவிட்டார். பின்பு 3 மாதங்கள் கழித்து சம்மதம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அவர்கள் கடந்த 1984ம் ஆண்டு முதன்முதலாக திருமணம் செய்து கொண்டனர். அதன் பிறகு அந்த தம்பதி லண்டன், நியூயார்க், ஸ்காட்லாந்து, லாஸ் வேகாஸ், கிரேஸ்லாந்து உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இதுவரை 106 முறை திருமணம் செய்து கொண்டனர். அவர்கள் காதலர் தினம், புத்தாண்டு நள்ளிரவு, கிறிஸ்துமஸ் தினம், பிப்ரவரி 29ம் தேதி என்று பல்வேறு நாட்களில் மீண்டும் மீண்டும் திருமணம் செய்து கொண்டனர்.
கடந்த 2001ம் ஆண்டு காதலர் தினத்தன்று அவர்கள் நியூயார்க்கில் உள்ள செரன்டிபிட்டி 3 ரெஸ்டாரன்ட்டில் திருமணம் செய்தபோது அதிக தடவை திருமணம் செய்து கொண்ட தம்பதி என்ற புதிய உலக சாதனை படைத்தனர். திருமணமாகி 30 ஆண்டுகளாக மகிழ்ச்சியாக வாழும் அந்த தம்பதி வரும் ஆகஸ்ட் மாதம் 4ம் தேதி மீண்டும் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications