மீண்டும் அத்துமீறல்: குதிரைகளில் இந்திய எல்லைக்குள் ஊடுருவிய 50 சீன வீரர்கள்

சீன ராணுவ வீரர்கள் 50 பேர் குதிரைகளில் கடந்த 16ம் தேதி கிழக்கு லடாக் பகுதியில் உள்ள சுமார் பகுதிக்குள் ஊடுருவியுள்ளனர். மேலும் அங்கு அவர்கள் கடந்த 17ம் தேதி காலை வரை தங்கியுள்ளனர் என்று தகவல் கிடைத்துள்ளது. சீன ராணுவ வீரர்கள் இந்திய எல்லைக்குள் வந்ததைப் பார்த்த நம் வீரர்கள் அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஆனால் சீன வீரர்களோ இது எங்கள் பகுதி நீங்கள் ஆக்கிரமித்த எங்கள் பகுதியில் இருந்து வெளியேறுங்கள் என்று இந்திய வீரர்களிடம் தெரிவிக்கும் வகையில் பேனர்கள் வைத்துள்ளனர். ஒரு வழியாக 2 நாட்கள் சண்டைக்குப் பிறகு கடந்த 18ம் தேதி அவர்கள் இந்திய எல்லையில் இருந்து வெளியேறியுள்ளனர். இந்த சண்டையில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.
சீன வீரர்கள் இந்திய எல்லைக்குள் வருவது இது ஒன்றும் முதல் முறையன்று. அவர்கள் கடந்த ஏப்ரல் மாதம் 15ம் தேதி கிழக்கு லடாக் பகுதிக்குள் ஊடுருவி அங்குள்ள தௌலத் பேக் ஓல்டி பகுதியில் கூடாரம் அமைத்தனர்.
மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி சீனாவுக்கு சென்று அந்நாட்டு பிரதமர் லீ கெகியாங்கை சந்தித்து எல்லைப் பிரச்சனை குறித்து பேச்சுவார்த்தை நடத்திய சில நாட்களில் இந்த ஊருடுவல் நடந்துள்ளது.
முன்னதாக கடந்த ஜூன் மாதம் 17ம் தேதி சீன வீரர்கள் இந்திய எல்லையில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை தூக்கிச் சென்றனர். இது குறித்து புகார் தெரிவிக்கப்பட்ட பிறகே அதை திருப்பிக் கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications