சென்னை உயர்நீதிமன்றத்திலும் தமிழில் வாதாட அனுமதிக்க வேண்டும்: கருணாநிதி

இது தொடர்பாக கேள்வி பதில்' வடிவிலான அறிக்கையில் அவர் கூறியுள்ளதாவது:
கேள்வி :- உயர்நீதிமன்ற மதுரைக் கிளை யில் 12-7-2013 அன்று தமிழில் வாதாட நீதிபதி அனுமதி மறுத்ததைப் பற்றி 15-7-2013 தேதிய "முரசொலி"யில் தாங்கள் விரிவாக எழுதியிருந் தீர்கள். அதற்குப் பிறகு அதே நீதிபதி அவர்கள் தனது உத்தரவைத் திரும்பப் பெற்று தமிழில் வாதாட அனுமதி அளித்திருக்கிறாரே, இது உங்களுக்குக் கிடைத்த வெற்றிதானே?
பதில் :- இது தமிழுக்குக் கிடைத்த வெற்றி. நான் என்னுடைய கடிதத்தில் அந்த நீதிபதியைக் குறையாக எதுவும் சொல்லவில்லை. அவரே அரசியல் அமைப்புச் சட்டப் பிரிவை எடுத்துச் சொல்லி உச்ச நீதிமன்றத்தில் தரப்பட்ட தீர்ப்பினை எடுத்துக்காட்டியதையும் நான் விளக்கியிருந் தேன். நான் மட்டுமல்ல; தமிழ் உணர்வு படைத்த வழக்கறிஞர்களும் இதற்காகக் குரல் கொடுத்தனர்.
இவற்றைத் தொடர்ந்து, நீதிபதி அவர் களும், தான் முன்பு கூறியதில் பிடிவாதம் காட்டாமல், தான் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவைத் திரும்பப் பெற்றுக் கொள்வதாகக் கூறி, தமிழில் வாதாட அனுமதிப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.
குறிப்பாக இதற்காக முதலில் கோரிக்கை வைத்த வழக்கறிஞர் பகத்சிங் மற்றும் அவருக்கும் எனக்கும் ஆதரவாக போராடத் துணிந்த ஏனைய வழக்கறிஞர்களுக்கும், தமிழில் வாதாட அனுமதியளித்த நீதியரசர் அவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இதையே முன்மாதிரியாகக் கொண்டு உயர்நீதிமன்றத்தில் உள்ள நீதியரசர்கள் அனைவரும் தமிழில் வாதாட அனுமதிக்க வேண்டுமென்று மீண்டும் ஒரு முறை கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications