கோவைக்கு வந்த மனித தலை... ரயிலில் தொங்கியபடி வந்ததால் பரபரப்பு!
கோவை: கோவைக்கு வந்த ரயிலில் ஒரு மனித தலை தனியாக தொங்கியபடி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை ரயில் நிலையத்துக்கு நேற்று காலை சபரி எக்ஸ்பிரஸ் ரயில் வந்தது. இந்த ரயில் ஹைதராபாத்திலிருந்து திருவனந்தபுரம் செல்லும் ரயிலாகும்.
ரயில் ஸ்டேஷனுக்கு வந்து நின்றபோது, முன்பகுதியில் ஒரு மனித தலை தொங்கியபடி இருந்ததைப் பார்த்து பிளாட்பார்மில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பலர் அலறி ஓடினர். யாரேனும் ரயிலுக்கு அடியில் சிக்கியிருக்கலாமோ என்ற அச்சமும் ஏற்பட்டது.
இதையடுத்து போலீஸார் விரைந்து வந்தனர். தலையை மீட்டனர். தடயவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். தலை மட்டுமே இருந்தது. உடல் இல்லை. எனவே தண்டவாளத்தில் யாரேனும் சிக்கி பலியாகியிருக்கலாம். தலை மட்டும் ரயிலில் சிக்கிக் கொண்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. உடலைத் தேடும் பணியை போலீஸார் முடுக்கி விட்டனர்.
இந்த நிலையில், முத்துக்கவுண்டன்புதூர் ரயில்வே கேட் அருகே ஒரு உடல் சிதைந்த நிலையில் கிடப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. அதை விரைந்து சென்று போலீஸார் மீட்டனர்.
மீட்கப்பட்ட தலை மற்றும் உடல் ஆகியவை கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்த நபர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டு தண்டவாளத்தில் வீசப்பட்டாரா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
-
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications