ராமசாமி படையாச்சி சிலையை அகற்றியதற்கு எதிர்ப்பு… பாமக, வன்னியர் சங்கம் மறியல்.. பயணிகள் பாதிப்பு
புதுச்சேரி: புதுச்சேரி அருகே ராமசாமி படையாச்சி சிலையை அகற்றியதைக் கண்டித்து பாமகவினரும், வன்னியர் சங்கத்தினரும் மறியலில் ஈடுபட்டனர். பேருந்து, வாகனங்கள் மீது கல்வீசி தாக்கப்பட்டதில் பயணிகள் படுகாயமடைந்தனர்.
புதுச்சேரி எல்லையில் உள்ள மதகடிப்பட்டு பகுதியில் புதுவை நுழைவு வாயில் உள்ளது. இங்குள்ள கோப்பெருந்தேவி சிலை எதிரே நேற்று அதிகாலை 3 மணியளவில் வன்னியர் குடும்ப ஒருங்கிணைப்பு இயக்கம் மற்றும் பாமக சார்பாக ராமசாமி படையாச்சி சிலை நிறுவப்பட்டது. நேற்று காலை அந்த வழியே சென்ற மக்கள் அதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும், திருபுவனை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த ராமசாமி படையாச்சி சிலையை அப்புறப்படுத்தி காவல் நிலையத்துக்கு எடுத்து சென்றனர்.அதை எதிர்த்து, 100க்கும் மேற்பட்ட வன்னியர் சங்கத்தினர் மற்றும் பாமகவினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் சிலையை மீண்டும் வைக்கும் வரை மறியல் போராட்டம் நீடிக்கும் என்று கூறியதால் மீண்டும் பதற்றம் ஏற்பட்டது. வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றதால் பயணிகள், மாணவ, மாணவிகள், அரசு ஊழியர், தொழிலாளர் என அனைத்து தரப்பினரும் கடுமையாக அவதிப்பட்டனர்.
கல்வீசி தாக்குதல்
மறியலின் போது சாலையில் நின்று கொண்டிருந்த தனியார் பஸ் மீது சிலர் கல் வீசி தாக்கி முன்பக்க கண்ணாடியை உடைத்தனர். உடனே, போலீசார் தடியடி நடத்தியதால் பாமக மற்றும் வன்னியர் சங்கத்தினர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். அப்போது சாலையில் நின்றிருந்த 15க்கும் மேற்பட்ட பேருந்துகள் மற்றும் லாரி கண்ணாடிகளை தடியால் உடைத்தனர். அதில், பேருந்தில் பயணம் செய்த 3 வயது சிறுமிக்கு மண்டை உடைந்து தலையில் இருந்து ரத்தம் கொட்டியது. பலத்த காயமடைந்த அந்த சிறுமியை மதகடிப்பட்டு தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் பேருந்தில் இருந்த பயணிகள் சிலரும் தாக்கப்பட்டனர். அதனால், அந்த பகுதியே போர்க்களம் போல் காட்சியளித்தது. சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், 400க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications