For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விடிய விடிய துப்பாக்கிச்சண்டை: 1000 அல்-கொய்தா கைதிகளை விடுவித்துச் சென்ற ஜிஹாத் அமைப்பு

Google Oneindia Tamil News

பாக்தாத்: சிறைச்சாலைகளில் விடிய விடிய துப்பாக்கிச் சண்டை நடத்தி சிறைக்கைதிகளாக உள்ள 1000க்கும் மேற்பட்ட அல்-கொய்தா தீவிரவாதிகளை விடுவித்துள்ளது ஜிஹாத் அமைப்பு.

ஈராக்கின் தாஜி மற்றும் அபு கரிப் நகரங்களில் உள்ள 2 சிறைச்சாலைகளில் சாதாரணக் கைதிகளோடு இணைந்து, ஆயிரக்கணக்கான அல்-கொய்தா தீவிரவாதிகளும் அடைக்கப்பட்டுள்ளனர். நேற்று முந்தினம் இரவு அச்சிறைகளின் மீது தாக்குதல் நடத்திய ஜிஹாத் அமைப்பினர்.

Al Qaeda

இதில் சுமார் ஆயிரம் கைதிகள் தப்பி ஓடியதாக முதலில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், நேற்று ஜிஹாத் அமைப்பினர் ட்வீட்டரில் வெளியிட்டுள்ள தகவலில் ‘தாங்களே சிறைச்சாலைகள் மீது தாக்குதல் நடத்தி சுமார் ஆயிரம் அல்-கொய்தா தீவிரவாதிகளை விடுவித்து சென்றோம்' என தெரிவித்துள்ளனர்.

கைதிகள் தப்பியோடிய தகவலை ஈராக் ராணுவ அதிகாரியான ஹக்கிம் அல்-சமிலியும் உறுதிபடுத்தியுள்ளார். இந்தத் தாக்குதல் சம்பவத்தில் 40க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

English summary
Militants have attacked two Iraqi prisons, including notorious Abu Ghraib, freeing at least 500 inmates in assaults that left at least 40 people dead.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X