மகளின் மர்ம மரணத்துக்கு காரணம் கோரி லண்டனில் போராடும் சென்னை இன்ஸ்பெக்ட்ர்

சென்னை அண்ணாநகர் மேற்கு பாலாஜி நகரில் வசித்து வருபவர் தாம்சன். இவர் முகப்பேர் கிழக்கு ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்ட்ராக பணியாற்றி வருகிறார். இவரது மகள் ஜார்ஜினா லண்டன் லிவர்புல் பல்கலைக் கழகத்தில் ஏரோனாட்டிக்கல் சயின்ஸ் மற்றும் ஸ்பேஸ் சயின்ஸ் படித்து வந்தார்.
இவரது விண்வெளி பயண ஆர்வத்தை முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் வியந்து பாராட்டினார். இதுவரை விண்வெளிக்குப் போன கல்பனா சாவ்லா மற்றும் சுனிதா வில்லியம்ஸ் ஆகியோர் இந்திய வம்சாவளியினர். ஆனால் இந்தியாவிலேயே பிறந்து அதுவும் தமிழகத்தில் பிறந்து விண்வெளிக்கு எதிர்காலத்தில் பயணிக்கக் கூடிய வாய்ப்புள்ளவராக கருதப்பட்டவர் ஜார்ஜினா.
ஆனால் கடந்த 13-ந் தேதி திடீரென லிவர்புல் பல்கலைக் கழகத்தில் இருந்து ஜார்ஜினாவின் தந்தை தாம்சனுக்கு வந்த தொலைபேசி அழைப்பில், ‘உங்கள் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்' என்று கூறப்பட்டது. இதனால் பதறி அடித்துக் கொண்டு லண்டன் போனார் தாம்சன். ஆனால் அவர் அங்கு போய்ச் சேருவதற்குள் ஜார்ஜினாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டுவிட்டது.
ஆனால் தமது மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பில்லை என்றும் அவளது மரணத்துக்கு உண்மையான காரணம் என்ன எனத் தெரிவிக்க வேண்டும் என்றும் லிவர்புல் பல்கலைக் கழகம் மற்றும் லண்டன் போலீசாரிடம் இன்றுவரை போராடிக் கொண்டிருக்கிறார் தாம்சன். உண்மையான காரணத்தை தெரிவிக்கும் வரை தமது மகளின் உடலை பெற முடியாது என்று கூறி லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தின் உதவியை நாடியிருக்கிறார் தாம்சன். இன்று வரை தமது மகளின் மரணத்துக்கான காரணத்தை அறிய முடியாமல் தவிப்பில் இருக்கிறார் அவர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications