ஒகேனக்கல் அருவியில் அளவில்லாத வெள்ளம்… காவிரி கரையோர பகுதிகளில் எச்சரிச்கை
சேலம்: கர்நாடக அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீரால் ஒகேனக்கல் அருவிகளில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. காவிரிக்கரையோரங்களில் வசிப்பவர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
தொடர் மழை காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பி உள்ளன. இந்த அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் காரணமாக, கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிக அளவிலான தண்ணீர் ஒகேனக்கலுக்கு வந்து கொண்டிருக்கிறது. வெள்ள ஆபத்து இருப்பதால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

ஒகேனக்கல் அருவிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஒடுவதால் சுற்றுலாப்பயணிகள் குளிக்கவும், படகு சவாரி செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே மேட்டூர் அணையின் நீர்மட்டம் 83.50 அடியாக அதிகரித்துள்ளது. வினாடிக்கு 19 ஆயிரத்து 75 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.அணையில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரத்து 800 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
அணை நீர்மட்டம் இன்னும் சில தினங்களில் 100 அடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுவதால் காவிரி டெல்டா மாவட்டங்களில் பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications