இந்த குட்டி பாப்பா தாங்க இளவரசி கேட் மிடில்டன்னின் குழந்தை
லண்டன்: நேற்று முன்தினம் ஆண் குழந்தையை பெற்றெடுத்த இங்கிலாந்து இளவரசி கேட் மிடில்டன் நேற்று மருத்துவமனையில் இருந்து அரண்மனைக்கு திரும்பினார்.
இங்கிலாந்து இளவரசர் வில்லியமின் மனைவி கேட் மிடில்டன் நேற்று முன்தினம் இரவு அழகிய ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். லண்டனில் உள்ள புனித மேரி மருத்துவமனையில் அவருக்கு பிரசவம் நடந்தது.
இந்நிலையில் நேற்று மாலை கேட் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதையடுத்து அவர் கென்சிங்டன் அரண்மனைக்கு கிளம்பினார்.

ராஜ குழந்தை
மருத்துவமனை வாயிலில் வில்லியம், கேட் குழந்தையுடன் நின்றபோது எடுத்த படம்.

கேட்
இளவரசி கேட்டின் குழந்தையை பார்க்க உலக மக்கள் ஆர்வமாக உள்ள நிலையில் அவர் குழந்தையை பொதுமக்களின் கண்களில் காண்பித்துள்ளார்.

வில்லியம்
மகனை கையில் வைத்துக் கொண்டு உற்சாகமாக காணப்படும் இளவரசர் வில்லியம்.

சார்லஸ்
முன்னதாக வில்லியமின் தந்தை இளவரசர் சார்லஸ் தனது மனைவி கெமிலாவுடன் குழந்தையை பார்க்க மருத்துவமனைக்கு வந்தார்.

மிடில்டன்கள்
தங்களின் பேரனை பார்க்க கேட்டின் பெற்றோர் கரோல் மற்றும் மைக்கேல் மிடில்டன் ஆகியோர் மருத்துவமனைக்கு வந்திருந்தனர்.












Click it and Unblock the Notifications