ஆள் வைத்து வெட்டிய விவகாரம்… ஜெ. பேரவை செயலாளர் திடீர் கைது!
சென்னை: அ.தி.மு.க ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தியை வெட்டிய வழக்கில் சென்னை தாமஸ்மலை ஒன்றிய கிழக்கு மண்டல ஜெயலலிதா பேரவை செயலாளர் மீனா சேகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொட்டிவாக்கம் 183வது வட்ட அ.தி.மு.க செயலாளர் கிருஷ்ணமூர்த்தியை கடந்த 2012ஆம் ஆண்டு டிசம்பரில் அடையாளம் தெரியாத நபர்கள் அரிவாளால் வெட்டினர். இதில் கிருஷ்ணமூர்த்தி பலத்த காயம் அடைந்தார்.
இந்த நிலையில், கொட்டிவாக்கத்தை சேர்ந்த ஆரோக்கியசாமி, ஏழுமலை ஆகியோரை குற்ற வழக்கு ஒன்றில் காவல்துறையினர் கைது செய்தனர்.
அப்போது, அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சென்னை தாமஸ்மலை ஒன்றிய கிழக்கு மண்டல ஜெயலலிதா பேரவை செயலாளர் மீனா சேகர் தூண்டுதலின் பேரில் கிருஷ்ணமூர்த்தியை வெட்டியது தெரியவந்தது.
இந்த நிலையில், இவர்கள் இரண்டு பேரும் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், சென்னை தாமஸ்மலை ஒன்றிய கிழக்கு மண்டல ஜெயலலிதா பேரவை செயலாளர் மீனா சேகரை காவல்துறையினர் இன்று கைது செய்தனர். மேலும், இந்த வழக்கில் செபாஸ்டின், சாதிக் பாட்சா ஆகியோருக்கும் தொடர்பு இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
-
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் வாசுதேவன் காலமானார்.. கடைசி வரை நிறைவேறாத ஆசை! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications