கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டம்: ஆகஸ்ட் 10 க்கு மாற்றம்… வைகோ அறிவிப்பு
சென்னை: கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு மக்கள் திரள் போராட்டம், ஆகஸ்ட் 10 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைகோ அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
கூடங்குளம் அணுஉலையை அகற்றக் கோரி, சென்னையில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி அன்று மாபெரும் மக்கள் திரள் கண்டன ஆர்ப்பாட்ட அறப்போராட்டம் நடத்துவது என கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பின் சார்பில், கடந்த 19 ஆம் தேதி அன்று சென்னையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், தீர்மானிக்கப்பட்டது.
ஆனால், தூத்துக்குடியில் நேற்று கடற்கரை பகுதி மக்கள், குறிப்பாக மீனவப் பெருமக்கள் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி போராட்டத்தை, வேறு தேதியில் மாற்றி நடத்திடுமாறு விடுத்த வேண்டுகோளை ஏற்று, கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு மக்கள் திரள் போராட்டம், ஆகஸ்ட் 10 ஆம் தேதி சனிக்கிழமை காலை 11 மணி அளவில், தலைநகர் சென்னை- சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில்நடைபெறும்.
இந்தப் போராட்டத்தில் கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு உணர்வாளர்களும், தென்தமிழ் நாட்டின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் உணர்வு உடையோரும் பெருமளவில் பங்கேற்க வேண்டும் என்று வைகோ கேட்டுக் கொண்டுள்ளார்.
-
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications