ஆஸ்திரேலியாவுக்கு தஞ்சம் புக சென்றவர்கள் கடலில் மூழ்கிய பரிதாபம்… 4 பேர் உயிரிழப்பு
ஜாவா: ஆஸ்திரேலியாவுக்கு புகலிடம் தேடிச் சென்றவர்களின் படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 குழந்தைகள் உட்பட 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை, பர்மா, ஈரான் என பல நாடுகளில் இருந்தும் புகலிடம் தேடி ஆஸ்திரேலியா செல்கின்றனர். இன்றைக்கு அவ்வாறு தஞ்சம் தேடி சென்றவர்களின் படகு ஒன்று இந்தோனேஷியாவின் ஜாவா தீவுக்கு அருகே செல்லும்போது விபத்துக்குள்ளானது.
கடலில் சிக்கி உயிருக்குப் போரடியவர்களில் 150 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர், காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 3குழந்தைகள் உட்பட 4பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
படகில் வந்தவர்கள் அனைவரும் ஈரான்,ஈராக் மற்றும் இலங்கையைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என ஆஸ்திரேலிய அரசு நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் மீட்பு பணிகளை மேற்கொள்ள இந்தோனேஷியாவுக்கு தேவையான உதவிகளை அளித்து வருவதாகவும் ஆஸ்திரேலியா அரசு கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications