குறி வைத்து இந்துத் தலைவர்களைத் தாக்குகிறார்கள் - பாஜக புகார்

தமிழகத்தில் சமீபத்தில் கொல்லப்பட்ட இந்து முன்னணி, பாஜக பிரமுகர்களின் இல்லங்களுக்கு இன்று பாஜக தலைமையால் அனுப்பப்பட்ட குழு விஜயம் செய்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைப் பார்த்து ஆறுதல் கூறியது.
பிரகாஷ் ஜவடேகர் தலைமையிலான இக்குழுவில் லோக்சபா எம்.பி. ஆனந்த் ஹெக்டே, செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இவர்களுடன் தமிழக பாஜக நிர்வாகிகளான பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், தமிழிசை சவுந்திரபாண்டியனும் உடன் இருந்தனர்.
முதலில் வேலூரில் கொலை செய்யப்பட்ட பாஜக மருத்துவ அணி மாநில செயலாளர் டாக்டர் அரவிந்த் ரெட்டி படுகொலை செய்யபட்ட இடத்தை பார்வையிட்டனர். பின்னர் ரெட்டி வீட்டுக்குச் சென்று அவரது மனைவி கவிதாவை சந்தித்து ஆறுதல் கூறினர்.
அதைத் தொடர்ந்து இந்து முன்னணி மாநில பொது செயலாளர் வெள்ளையப்பன் படுகொலை செய்யபட்ட இடத்தை பார்வையிட்டனர். பிறகு செய்தியாளர்களிடம் பிரகாஷ் ஜவடேகர் பேசுகையில், ஆடிட்டர் ரமேஷ் படுகொலை செய்யபட்ட இடத்தை சேலத்தில் பார்த்தோம்.
வேலூரில் கொலை செய்யபட்ட அரவிந்த் ரெட்டி மற்றும் வெள்ளையப்பன் குறித்து ஆய்வு செய்ய வந்துள்ளோம். தொடர்ந்து எங்களது இயக்க பொறுப்பாளர்களை குறி வைத்து தாக்குகிறார்கள். இதுகுறித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவோம் என்றார்.
-
பாஜகவில் இருந்து விலகிய கரு நாகராஜன்.. அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் இணைந்தார்! -
தமிழக பாஜகவை செதில் செதிலாக உடைத்த அண்ணாமலை ஆர்மி.. 2 நாட்களில் தரமான சம்பவம்.. பெரும் நிலநடுக்கம்! -
எக்ஸாம்ல பாஸ் பண்ணுங்க.. பதவியை அள்ளுங்க! அண்ணாமலையின் அடடே ப்ளான்! இது லிஸ்ட்லயே இல்லையே! -
10 மணி நேரத்தில் 10 லட்சத்தை தாண்டியது.. குவிந்த ஆதரவு.. உற்சாகத்துடன் அண்ணாமலையே போட்ட பதிவு -
பாஜகவில் இருந்து விலகிய பெண் பிரபலம்! கை - தலையில் கட்டு போட்டு.. சிரிச்சே ஃபேமஸானாரே! அவரே தான்! -
"நான் முதலில் தமிழன்.." பாஜகவில் இருந்து விலகிய முதல் நாளே அண்ணாமலை சொன்ன வார்த்தை! நோட் பண்ணுங்க -
பாஜக மட்டுமில்லை.. அண்ணாமலையால் தவெக - திமுக - அதிமுக - நாம் தமிழருக்கு விழும் பெரிய அடி -
பாஜக ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! 20 மணி நேரத்தில் இத்தனை உறுப்பினர்களா! அதிரும் அரசியல் களம் -
சென்னை திரும்பிய அண்ணாமலை.. விமான நிலையத்தில் திரண்டு வந்து ஆதரவாளர்கள் கொடுத்த ‘மாஸ்’ வரவேற்பு! -
சோனம் வாங்சுக் மத்திய கல்வி அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும்! கரப்பான் பூச்சி ஜனதா கட்சி வலியுறுத்தல்! -
Annamalai: பாஜகவில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்தவர்கள்.. அரசியலில் ஜொலித்தார்களா? சறுக்கினரா? -
ஓட்டுக்கு ரூ.2000..? செய்தியாளர்களை தள்ளிவிட்ட தவெக நிர்வாகி.. காரில் எஸ்கேப் ஆன எம்.எல்.ஏ!












Click it and Unblock the Notifications