லோக்சபா தேர்தல்… ஆணையம் இப்பவே சுறுசுறு- கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரகளுக்கு ஆர்டர்!

டெல்லி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சட்டீஸ்கர் மற்றும் மிசோராம் ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது.
இதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. தேர்தலுக்குத் தேவையா மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தயார் நிலையில் வைக்கத் தொடங்கியுள்ளது.
இந்த மின்னணு இயந்திரங்கள் பெல், இசிஐஎல் ஆகிய நிறுவனங்களில் தயார் செய்யப்பட்டு செப்டம்பர் அல்லது அக்டோபரில் தேர்தல் ஆணையம் வசம் ஒப்படைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் 5 மாநில சட்டமன்ற தேர்தலுடன் லோக்சபா தேர்தலும் நடைபெறலாம் என்று கூறப்படுகிறது.
இதற்காக கூடுதலாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை உற்பத்தி செய்ய ஆர்டர்கள் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இது குறித்து கருத்து கூறிய தேர்தல் ஆணைய அலுவலக அதிகாரி ஒருவர், புதிதாக 16 லட்சம் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கு ஆர்டர்கள் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். 5 மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல் மட்டுமல்லாது லோக்சபா தேர்தலும் வரும் பட்சத்தில் மின்னணு இயந்திரங்களின் தேவை அதிகரிக்கும் என்று கூறியுள்ளார்.
தேர்தல் ஆணைய கணக்குப் படி மொத்தம் 78.86 கோடி வாக்காளர்கள் உள்ளனர். 5 மாநில சட்டமன்ற தேர்தலுடன், லோக்சபா தேர்தலும் நடைபெறும் பட்சத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களின் தேவையும் அதிகரிக்கும். எனவேதான் தேர்தல் ஆணையம் இப்போதிருந்தே சுறுசுறுப்பாக பணியை தொடங்கியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications