தாம்பரம் ரயில் நிலைய மேம்பாலத்தில் இருந்து குதித்து இன்போசிஸ் என்ஜினியர் தற்கொலை
சென்னை: தாம்பரம் ரயில் நிலையத்தில் உள்ள மேம்பாலத்தில் இருந்து குதித்து இன்போசிஸ் ஊழியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் சுதீப் குமார் ஜனா(33). மெக்கானிக்கல் என்ஜினியர். அவர் இன்போசிஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அவர் பல ஆண்டுகளாக சென்னையில் தங்கி வேலை பார்த்து வந்தார். கிழக்கு தாம்பரத்தில் உள்ள மகாலக்ஷ்மி நகரில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் இரண்டாவது மாடியில் வீடு எடுத்து தங்கி இருந்தார்.
அவர் நேற்று காலை 7.15 மணிக்கு தாம்பரம் ரயில் நிலையத்தில் உள்ள நடை மேம்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். 50 அடி உயரத்தில் இருந்து குதித்த அவரின் தலையில் பலத்த அடிபட்டு இறந்தார். இந்நிலையில் அந்த வழியாக வந்த பியர்ல் சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் அவரது உடல் மீது ஏறியது. இதையடுத்து அவரது உடல் குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவரது பெற்றோருக்கும் இது குறித்து தகவல் கொடுக்கப்பட்டது.
ஜனா அண்மை காலமாகவே மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்ததாக அவரது நண்பர் ஒருவர் தெரிவித்தார். அவருடன் தங்கியிருந்த நபர் திருமணமாகி போகவே ஜனா மன அழுத்தத்தின் உச்சியில் இருந்துள்ளார். இதையடுத்து அவரது பெற்றோர் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு மேற்கு வங்கத்தில் இருந்து சென்னைக்கு வந்து மகனுடன் தங்கியிருந்தனர்.
சில மாதங்களுக்கு முன்பு அந்த வீட்டிற்கு குடிவந்த ஜனா தங்களுடன் அவ்வளவாக பேசியது கூட கிடையாது என்று முதல் மாடியில் தங்கியிருக்கும் கிருஷ்ணகிரி மற்றும் சேலத்தை சேர்ந்த 2 நபர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் பிரேத பரிசோதனைக்கு பிறகு உடல் ஜனாவின் பெற்றோரிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications