லிங்கன் நினைவிடத்தில் ‘பச்சை, பசையாய்..’ பெயிண்ட் தெளித்த பெண் கைது
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்: அமெரிக்காவில் மூன்று முக்கிய சுவர்களில் பெயிண்ட் தெளித்த குற்றத்துக்காக பெண் ஒருவர் போலீசாரால் கைது செய்யப் பட்டுள்ளார். அவற்றில் லிங்கன் நினைவிடமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த வாரத்தில் அமெரிக்காவில், லிங்கன் நினைவிடம் உட்பட சில முக்கிய இடங்களில் யாரோ மர்ம நபர்கள் பச்சை நிற பெயிண்டை தாறுமாறாக ஊற்றிச் சென்றிருந்தனர். இதனைக் கண்டு அதிர்ந்து போன அதிகாரிகள் போலீசில் புகார் செய்தனர்.
போலீசார் மேற்கொண்ட விசாரணையில் மூன்று இடங்களில் தெளிக்கப் பட்டிருந்ததும் ஒரே வகையைச் சேர்ந்த பெயிண்ட் என தெரிய வந்தது. மேலும், அவ்வாறு பெயிண் ஊற்றியது ஒரு பெண் எனவும் கண்டுபிடித்தனர்.
சந்தேகத்தின் பேரில் ஒரு பெண்ணைக் கைது செய்துள்ள அமெரிக்க போலீசார், அப்பெண் குறித்து மேற்கொண்டு தகவல்கள் தெரிவிக்க மறுத்து விட்டனர்.












Click it and Unblock the Notifications