ஜெர்மனியில் சுக பிரசவத்தில் 6 கிலோ எடையுள்ள குழந்தையை பெற்ற பெண்
பெர்லின்: ஜெர்மனியில் பெண் ஒருவர் 6.1 கிலோ எடை உள்ள குழந்தையை சுக பிரசவம் மூலம் பெற்றெடுத்துள்ளார்.
ஜெர்மனி லீப்சிக்கில் உள்ள பல்கலைக்கழக மருத்துவமனையில் இளம்பெண் ஒருவர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கடந்த 26ம் தேதி பெண் குழந்தை பிறந்தது. 6.1 கிலோ எடையுள்ள பெரிய குழந்தையை அவர் சுக பிரசவத்தில் பெற்றெடுத்துள்ளார். வழக்கமாக குழந்தை பெரியதாக இருந்தால் சிசேரியன் மூலம் தான் குழந்தையை எடுப்பார்கள்.
ஆனால் அப்பெண் சுக பிரசவத்தில் பெற்றெடுத்துள்ளது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. அந்த பெண் கர்ப்பம் தரித்த பிறகு அவருக்கு சர்க்கரை வியாதி ஏற்பட்டுள்ளது. ஆனால் அது கவனிக்கப்படாமல் இருந்துள்ளது. அதனால் தான் குழந்தை மிகவும் பெரியதாக பிறந்துள்ளது என்று கூறப்படுகிறது.
அந்த குழந்தைக்கு ஜஸ்லீன் என்று பெயர் வைத்துள்ளார்கள். ஜஸ்லீன் தொடர்ந்து மருத்துவமனையில் இருந்தாலும் அவரும், அவரது தாயும் நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஜெர்மனியில் இதுவரை பிறந்த குழந்தைகளிலேயே ஜஸ்லீன் தான் மிகப்பெரிய குழந்தை ஆகும்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications