ரூ1, ரூ5, ரூ12... ‘திருப்தியா’ சாப்பிடுங்க : சோனியா, பிரதமருக்கு வரும் ‘மணியார்டர்கள்’
மும்பை: சாப்பாட்டு செலவிற்காக ரூ1, ரூ 5, ரூ 12க்கு பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் சோனியா காந்திக்கு மணியார்டர் அனுப்பும் வித்தியாசமான போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர் பா.ஜ.கவினர்.
அதிகார வர்க்கத்தில் இருப்பவர்களுக்கு அடி மட்ட மக்களின் வாழ்க்கைத் தரம் புரிவதில்லை. அப்படியே யாராவது புரிய வைக்க முயற்சி மேற்கொண்டாலும் அது அரசியலாகி விடுகிறது என்பதற்கு பின் வரும் சம்பவங்களே பெரிய உதாரணாம்.
ஆனால், இவர்களது அரசியல் சண்டைகளுக்கும் பலிகடா ஆக்கப்படுவது அப்பாவி மக்களே என்பது மறுக்க இயலாத உண்மை.

பொருந்தாத புள்ளி விவரம்...
சமீபத்தில், தனிநபர் வருமானம் மற்றும் செலவினம் தொடர்பான புள்ளி விவரம் ஒன்றை மத்திய அரசு வெளியிட்டிருந்தது. அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் விவரங்கள் மக்களின் வாழ்க்கைக்கு சற்றும் பொருந்தாதவை என எதிர்கட்சிகள் குற்றம் சாட்டின.

வயிறாற சாப்பிடலாம்...
எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டிற்கு பதிலளிக்கும் விதமாக, காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் 12 ரூபாய் இருந்தால் ஒருவர் மும்பையில் வயிறாற சாப்பிடலாம் எனவும், மற்றொரு செய்தி தொடர்பாளரான ரஷீத் மசூத், டெல்லியில் 5 ரூபாய்க்கு கூட சாப்பாடு கிடைக்கிறது என்றும் அடுத்தடுத்து கருத்து தெரிவித்தார்கள்.

நெத்தியடி...
இவர்களுக்கு பாடம் புகட்டும் விதமாக, வித்தியாசமான போராட்டத்தில் குதித்துள்ளனர் பாஜகவினர். அதில், மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ, கோவர்தன் ஷர்மா தலைமையில் பா.ஜ.க.வினர் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரின் சாப்பாட்டு செலவுக்கு மணி ஆர்டர் அனுப்பத் தொடங்கியுள்ளனர்.

மணியார்டர்கள்...
1 ரூபாய், 5 ரூபாய், 12 ரூபாய் என தனித்தனியாக பிரதமருக்கும், சோனியா காந்திக்கும் அவர்கள் தொடர்ந்து மணி ஆர்டர் அனுப்பி வருகின்றனர். முடிந்தால் இந்த ரூபாய்க்கு சாப்பாடு வாங்கி திருப்தியாக சாப்பிடுங்கள் என்பதை உணர்த்துவதற்காகவே இந்த் வித்தியாசமான போராட்டமாம்.
-
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்!












Click it and Unblock the Notifications