பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை திரும்ப பெறுக... வைகோ வலியுறுத்தல்
சென்னை: மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகளால், ரூபாயின் மதிப்பு சரிந்துகொண்டே போகிறது. அதனைச் சீர்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ளாமல், பெட்ரோல், டீசல் விலையை தாறுமாறாக உயர்த்திக்கொண்டே போவதை ஏற்க முடியாது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து ஏழாவது முறையாக டீசல் விலையும், கடந்த இரு மாதங்களில் பெட்ரோல் விலை ஐந்தாவது முறையாக உயர்ந்தப்பட்டுள்ளதாக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறியுள்ளதாவது :

7 முறை டீசல் விலை
"மக்கள் விரோத மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு, பெட்ரோல், டீசல் விலையை தொடர்ந்து உயர்த்தி வருவதை தனது கடமையாகக் கருதி செயல்படுகிறது. இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து ஏழாவது முறையாக டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

5முறை பெட்ரோல் விலை
கடந்த இரு மாதங்களில் பெட்ரோல் விலை ஐந்தாவது முறையாக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் வரியையும் சேர்த்து டீசல் விலை 61 காசுகளும், பெட்ரோல் விலை 89 காசுகளும் அதிகரித்துவிட்டன. நாட்டின் பணவீக்க விகிதம் உயர்வதற்கும், விலைவாசி ஏற்றத்திற்கும் முக்கியக் காரணியாக பெட்ரோல், டீசல் விலை உயர்வுதான் இருக்கிறது.

தவறான பொருளாதார கொள்கை
மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகளால், ரூபாயின் மதிப்பு சரிந்துகொண்டே போகிறது. அதனைச் சீர்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ளாமல், பெட்ரோல், டீசல் விலையை தாறுமாறாக உயர்த்திக்கொண்டே போவதை ஏற்க முடியாது. பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் பொறுப்பை எண்ணெய் நிறுவனங்களிடம் ஒப்படைத்துவிட்டு, விலை ஏற்றத்தைக் கண்காணிக்கும் கடமையில் இருந்து ஒதுங்கிக் கொண்ட மத்திய அரசின் செயல்பாடு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

எழை மக்கள் பாதிப்பு
பெட்ரோல், டீசல் விலை உயர்வினால், விலைவாசி உயர்ந்து சாதாரண ஏழை எளிய மக்கள் மேலும் பாதிக்கப்படுவார்கள்.எனவே, மத்திய அரசு உடனடியாக பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்பப் பெற வேண்டும்.

சமையல் எரிவாயு விலை
இதைப்போலவே சமையல் எரிவாயு மானிய விலையில், ஆண்டிற்கு ஒன்பது உருளைகள்தான் வழங்கப்படும் என்ற கட்டுப்பாடு கொண்டுவந்துவிட்டு, மானியம் இல்லாத எரிவாயு விலையை ரூபாய் 44 உயர்த்தப்பட்டுள்ளதையும் வன்மையாகக் கண்டிப்பதுடன், சமையல் எரிவாயு விலையையும் திரும்பப் பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்" இவ்வாறு வைகோ தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
-
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications