கணித ஒலிம்பிக் போட்டி: இந்தியா 5 பதக்கங்களை வென்றது
டெல்லி: கொலம்பியா நாட்டில் நடைபெற்ற 54வது கணித ஒலிம்பிக் போட்டியில் இந்தியா 5 பதக்கங்களைப் பெற்றுள்ளது.
1959ம் ஆண்டு ருமேனியாவில் தொடங்கப் பட்ட கணித ஒலிம்பிக் போட்டிகள், உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்காக உலக அளாவில் நடத்தப்படும் கணிதப் போட்டியாகும். ஆரமப்த்தில் வெறும் 7 நாடுகளின் பங்களிப்போடு மட்டுமே தொடங்கப்பட்ட இப்போட்டியில் தற்போது கிட்டத்தட்ட 100 நாடுகள் வரை கலந்து கொள்கின்றன.
ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு நாட்டில் நடத்தப்படும் இப்போட்டியின் விதிமுறைகளையும், , மரபுகளையும் கணித ஒலிம்பிக் போட்டியின் ஆலோசனை வாரியம் கவனித்துக் கொள்கிறது. இந்தாண்டிற்கான 54வது கணித ஒலிம்பிக் போட்டி, கொலம்பியா நாட்டில் சாண்டா மார்தா என்ற இடத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில், 97 நாடுகளில் இருந்து மொத்தம் 528 மாணவர்கள் கலந்துகொண்டனர். இதில், இந்தியாவில் இருந்து 6 மாணவர்கள் பங்கேற்றனர். இம்மாணாவர்களுக்கான அனைத்து செலவுகளையும் மும்பையில் உள்ள டாட்டா ஆராய்ச்சிக் கழகத்தின் கீழ் இயங்கும் ஹோமி பாபா அறிவியல் கல்வி நிறுவனம் வழங்கியது.
இந்த 54வது கணித ஒலிம்பிக் போட்டியில், இரண்டு வெள்ளிப் பதக்கங்களையும், மூன்று வெண்ககலப் பதக்கங்களையும் இந்திய மாணவர்கள் பெற்றனர். இம்மாணவர்களில், கொல்கத்தாவைச் சேர்ந்த சங்கிக் சஹா, டெல்லியைச் சேர்ந்த சுபம் சின்ஹா ஆகியோர் வெள்ளிப் பதக்கங்களையும், பிலாயைச் சேர்ந்த பல்லவ் கோயல், ஹைதராபாத்தைச் சேர்ந்த பிரணாப் நுதி மற்றும் புனாவைச் சேர்ந்த அனீஷ் பிரசாத் செவேகரி ஆகியோர் வெண்கலப் பதக்கங்களையும் பெற்றுள்ளனர்.
இவர்களுடன் சென்ற மற்றொரு மாணவரான பூனாவைச் சேர்ந்த சைத்தன்யா தபு என்பவர் எந்தப் பதக்கங்களையும் பெறவில்லை.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications