ஆந்திர நகரங்களை விட்டு வெளியேறும் தெலுங்கானா மாணவர்கள்
ஹைதராபாத்: தெலுங்கானா தனி மாநிலப் பிரிவினையைத் தொடர்ந்து இப்பகுதியைச் சேர்ந்த பிற ஆந்திர நகரங்களில் படித்து வரும் கல்லூரி மாணவர்களுக்குப் புதுப் பிரச்சினை கிளம்பியுள்ளது.
அதாவது ஆந்திர மாநிலத்தில் நடந்து வரும் இயாம்செட் என்ற நுழைவுத் தேர்வை எழுதுவதில் புதுப் பிரச்சினையை இவர்கள் சந்திக்கவுள்ளனர்.
கிட்டத்தட்ட 50,000 தெலுங்கானா மாணவர்கள் பல்வேறு ஆந்திர நகரங்களில் படித்து வருகிறார்களாம். இயாம்செட் விதிப்படி, ஒரே மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களே அந்தத் தேர்வை எழுத முடியும்.
எனவே தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், தங்களது மாநிலப் பகுதியில் இந்தத் தேர்வை எழுத விரும்புகிறார்களாம். எனவேதான் தெலுங்கானாவுக்கு திரும்ப அவர்கள் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
இயாம்செட்டும் பிரியும்
தற்போது ஆந்திராவை இரண்டாகப் பிரிக்க முடிவெடுத்திருப்பதால் இயாம்செட்டும் இரண்டாக பிரிக்கப்படும் என்று தெரிகிறது.
தெலுங்கானா பகுதிக்கு தனி தேர்வு
இதன்படி தெலுங்கானா பிராந்தியத்திற்குட்பட்ட மாணவர்களுக்கு தனியாக தேர்வு வைக்கப்படும். இதை எழுதாவிட்டால் அவர்களுக்கு தெலுங்கானா பகுதியில் உள்ள பல்கலைக்கழகம், கல்லூரிகளில்இடம் கிடைப்பது சிக்கலாகும்.
மொத்தமாக கிளம்புகிறார்கள்
இந்தப் புதிய பிரச்சினையால் தெலுங்கானா பகுதி மாணவர்கள், பிற ஆந்திரப் பகுதிகளிலிருந்து தங்களது சொந்த ஊர்களுக்குக் கிளம்ப முடிவு செய்துள்ளனராம்.
ஆந்திராவில்தான் நிறைய கல்லூரிகள்
தெலுங்கானாவை விட பிற ஆந்திரப் பகுதிகளில்தான் நிறைய நல்ல கல்லூரிகள் உள்ளதால் இங்கு வந்து படிப்பதையே தெலுங்கானா மாணவர்கள் அதிகம் விரும்புகின்றனர். ஆனால் தற்போது மாநிலப் பிரிவினையாலும், இயாம்செட் குழப்பத்தாலும் சொந்த ஊர்களுக்கு கிளம்ப வேண்டிய நிலை வந்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications