இலங்கையில் சுத்தமான குடிநீர் வேண்டி போராட்டம்: துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி, 15 பேர் காயம்
கொழும்பு: இலக்கையில் சுத்தமான குடிநீர் வேண்டி மக்கள் நடத்திய போராட்டத்தில் திடீரென ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும், படுகாயமடைந்த 15பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து 20 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது வெலிவெரியா. இங்கு வசிக்கும் மக்களுக்கு தூய்மையான குடிநீர் கிடைப்பதில்லையாம். அதற்கு காரணம், அப்பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் இருந்து வெளியேறும் கழிவுநீரானது, அப்பகுதியில் உள்ள நல்லநீரில் கலந்து விடுவதுதான்.
எனவே, அப்பகுதியைச் சேர்ந்த 15க்கும் மேற்பட்ட கிராமங்கள் குடிநீர் இன்றி அல்லாடும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதாகக் கூறி, அப்பகுதி மக்கள் சுமார் 4பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நல்ல குடிநீர் வேண்டும். அத்தோடு குடிநீரை மாசுபடுத்தும் அத்தொழிற்சாலைகயை இழுத்து மூட வேண்டும் என்பதே அவர்களது கோரிக்கையாக இருந்தது.
போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை கலைந்து போகச் செய்ய கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர் போலீசார். போராட்டக்காரர்களுக் கற்களை வீசி பதில் தாக்குதல் நடத்தினர். இதனால் அங்கு மோதல் வெடித்தது. அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ராணுவத்தினர் திடீரென துப்பாக்கிச் சூட்டில் இறங்கினர்.
துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானார். மேலும் படுகாயமடைந்த 15 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவத்தை படமெடுக்க முயன்ற பத்திரிக்கையாளர் ஒருவரின் கேமராவும் ராணுவத்தினரால் அடித்து நொறுக்கப் பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications