ஜெயலலிதா படத்தை தீ வைத்து கொளுத்திய அதிமுக தொண்டர்!
திருப்பூர்: முதல்வர் ஜெயலலிதா படத்தை அதிமுக தொண்டர் ஒருவரே தீ வைத்து கொளுத்திய சம்பவம் அதிமுக தொண்டர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் அருகே உள்ளது வளையன்காடு. இந்த பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (60). சமையல் தொழிலாளி. அ.தி.மு.க. தொழிற்சங்கத்தில் உள்ளார்.
இந்த நிலையில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு, இவரது மகன் சவுந்தரபாண்டியன் - மருமகள் அமுதா தம்பதிகளுக்குAAம், அதே பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் - தீபா தம்பதிகளுக்கும் இயையே முன் விரோதம் காரணமாக வாக்கு வாதம் ஏற்பட்டு மோதல் வெடித்துள்ளது. இதில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாக கூறப்படுகின்றது.
இதனால், ஆறுமுகம் மகன் சவுந்தர பாண்டியன் மற்றும் எதிர்தரப்பு பாஸ்கர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இதனால் ஆவேசம் அடைந்த ஆறுமுகம், வளையன்காடு சாலை முன்பு அதிமுக கட்சிக் கொடிக் கம்பம் முன்னிலையில் , அதிமுக கட்சி வேட்டிகள், உறுப்பினர் அடையாள அட்டை மற்றும் முதல்வர் ஜெயலலிதா படம் ஆகியவற்றை தீ வைத்து எரித்தார்.
இந்த தகவல் அறிந்த அப் பகுதி அதிமுக நிர்வாகிகள் ஆறுமுகத்தை அடித்து உதைத்தனர். மேலும், ஆறுமுகம் மீது திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் ஆறுமுகம் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூரில் முதல்வர் ஜெயலலிதா படத்தை அதிமுகவைச் சேர்ந்த ஒருவரை எரித்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications