காதலில் உறுதி.. தந்தை சேரனுடன் செல்ல போலீஸ் ஸ்டேஷனில் மகள் தாமினி மறுப்பு!

இயக்குநர் சேரன் மகள் தாமினியை காதலிக்கும் உதவி இயக்குநர் சந்துரு இன்று காலை 11 மணிக்கு ஆயிரம் விளக்கு போலீஸ் நிலையத்தில் ஆஜர் ஆனார்.
காதலனிடம் தன்னை சேர்த்து வைக்க வேண்டும். காதலனுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று அவர் ஏற்கெனவே புகார் கூறியிருந்தார். இதையடுத்து சேரன், அவரது மனைவி செல்வராணி, மகள் தாமினி ஆகியோரிடம் நேற்றிரவு போலீசார் விசாரணை நடத்தினார்கள். துணை கமிஷனர் சிவக்குமார், உதவி கமிஷனர் ஷியாமளாதேவி ஆகியோர் விசாரணை நடத்தினார்கள். அப்போது தாமினிக்கு போலீசார் அறிவுரை கூறினார்கள்.
தற்போது படித்து கொண்டு இருக்கும் தாமினியிடம் படிப்பை முடித்த பிறகு திருமணம் பற்றி முடிவு செய்யலாம். அதுவரை பெற்றோரிடம் இருக்கும் படி அறிவுரை கூறினார்கள். ஆனால் அதை தாமினி ஏற்கவில்லை. காதலனுடன்தான் செல்வேன் என்று கூறினார். நேற்று நடந்த விசாரணையின்போது காதலன் சந்துரு வரவில்லை. அவர் கோவைக்கு சென்று இருந்தார். ஆனால் சந்துருவின் அம்மா, அக்காள் ஆகியோர் வந்திருந்தனர். மகளிடம் சேரன் கெஞ்சினார். உன்னை எதுவும் செய்ய மாட்டேன் வீட்டிற்கு வா என்று கண் கலங்கியவாறு அழைத்தார். ஆனால் தாமினி தந்தையின் அழைப்பை ஏற்கவில்லை. காதலனுடன்தான் செல்வேன் என்றார்.
நள்ளிரவு வரை போலீசார் தாமினிக்கு ‘கவுன்சிலிங்' கொடுத்தனர். ஆனால் அவர் பெற்றோருடன் செல்ல விரும்பவில்லை. இந்த நிலையில் இன்று 2-வது நாளாக தாமினிக்கு கவுன்சிலிங் கொடுக்க போலீசார் முடிவு செய்தனர். அதன்படி தாமினி ஆயிரம்விளக்கு போலீஸ் நிலையத்திற்கு இன்று வந்தார். அவருக்கு பெண் போலீஸ் அதிகாரி அறிவுரை, ஆலோசனைகளை வழங்கினார். படிக்க கூடிய வயதில் படிக்க வேண்டும், காதல், திருமணம் போன்றவற்றை அதன் பிறகு முடிவு செய்யலாம். பெற்றொருடன் செல்வதுதான் தாமினிக்கு பாதுகாப்பு என்று தெரிவித்தனர். ஆனால் அதை அவர் ஏற்கவில்லை. தொடர்ந்து பிடிவாதமாக இருந்து வருகிறார். காதலனுடன்தான் செல்வேன் என்பதில் உறுதியாக இருக்கிறார்.
இதேபோல காதலன் சந்துருவுக்கும் தனியாக கவுன்சிலிங் கொடுக்கப்பட்டது. அவரும் தாமினியுடன் வாழ்வேன் என்று பிடிவாதமாக கூறினார்.
இதற்கிடையே சேரனின் மனைவி செல்வராணி நேற்றிரவு உடல்நலம் பாதிக்கப்பட்டார். ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications