ஐ.நா.வுக்கான அமெரிக்க பிரதிநிதியாக சமந்தா பவர் பதவி ஏற்பு!
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்: ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்காவின் பிரதிநிதியாக ஒபாமாவின் சிறப்பு உதவியாளர் சமந்தா பவர் நேற்று பதவி ஏற்றார்,
போர் நிலவரங்கள் மற்றும் மனித உரிமை தொடர்பான துறை வல்லுனரான சமந்தா பவர் ஐ.நா. சபை பிரதிநிதியாக நியமிக்கப்பட்டதற்கு அமெரிக்க பார்லிமென்ட் நேற்று ஒப்புதல் அளித்தது.

இதுதொடர்பாக நடைபெற்ற வாக்கெடுப்பில் சமந்தா பவரின் நியமனத்துக்கு ஆதரவாக 87 வாக்குகளும் எதிராக 10 வாக்குகளும் பதிவாகின.
இதுவரை ஐ.நா. சபைக்கான அமெரிக்க தூதராக பொறுப்பு வகித்த சூசன் ரைஸ் இனி அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்படுவார் என ஒபாமா அறிவித்ததையடுத்து சமந்தா பவருக்கு இந்த பதவி வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து வெள்ளை மாளிகையில் நேற்று நடைபெற்ற விழாவில் ஐ.நா. சபைக்கான அமெரிக்க பிரதிநிதியாக சமந்தா பவர் பதவியேற்றுக் கொண்டார்.












Click it and Unblock the Notifications