வெளிநாட்டு சிறையில் தவிக்கும் மீனவர்கள்: உடனடி நடவடிக்கை தேவை; அதிமுக கோரிக்கை
டெல்லி: ஈரான் மற்றும் இலங்கை சிறைகளில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க. எம்.பி. மு.தம்பிதுரை கோரிக்கை விடுத்தார்.
நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. லோக்சபாவிலும், ராஜ்யசபாவிலும் தெலுங்கானா பிரிவினை, போடாலாந்து விவகாரம் காரணமாக அமளி ஏற்பட்டது. கேள்வி நேரம் முடிந்ததும் இதுகுறித்து நாடாளுமன்ற அ.தி.மு.க. தலைவர் மு.தம்பிதுரை இந்த பிரச்சினையை எழுப்பி பேசியதாவது
ராமநாதபுரம், நாகப்பட்டினம், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 16 தமிழக மீனவர்கள் சவுதி அரேபியாவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்தனர். அப்போது அவர்கள் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது வழிதெரியாமல் ஈரான் நாட்டு கடல் எல்லைக்கு சென்றுவிட்டனர். ஈரான் அரசு அவர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. சிறையில் அவதிப்பட்டுவரும் தமிழக மீனவர்கள் 16 பேரை விடுதலை செய்ய இந்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோல இலங்கை கடற்படையினர் கடந்த மாதம் இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்து அங்கு மீன் பிடித்துக் கொண்டிருந்த 26 தமிழக மீனவர்களை பிடித்துச் சென்று சிறையில் அடைத்துள்ளனர். அவர்களையும் விடுவிப்பதற்கான நடவடிக்கைகளையும் இந்திய அரசு உடனடியாக எடுக்க வேண்டும்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா, இதுதொடர்பாக பிரதமர் இந்த பிரச்சினையில் தலையிட்டு அவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமருக்கு ஏற்கனவே கடிதம் எழுதியிருக்கிறார்.
எனவே இருநாட்டு சிறைகளில் வாடும் தமிழர்களை உடனடியாக விடுவிக்க மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று தம்பிதுரை கூறினார்.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications