பாகிஸ்தான் தூதரை நேரில் அழைத்து இந்தியா கடும் கண்டனம்
டெல்லி: ஜம்மு காஷ்மீர் எல்லையில் 5 இந்திய ராணுவ வீரர்கள் பலியானதைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள பாகிஸ்தான் துணை தூதரை நேரில் அழைத்து கடும் கண்டனத்தை இந்தியா தெரிவித்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் இந்திய வீரர்களின் தலைகளை பாகிஸ்தான் ராணுவத்தினர் துண்டித்து எடுத்துச் சென்றனர். இதைத் தொடர்ந்து இரு நாடுகளிடையேயான பதற்றநிலை அதிகரித்து வந்தது. இதனிடையே இருதரப்பும் மீண்டும் பேச்சுகளைத் தொடங்க தீர்மானித்திருந்தது.
இந்நிலையில்தான் இன்று அதிகாலை ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் திடீரென தாக்குதலை நடத்தியது. இதில் 5 இந்திய வீரர்கள் பலியாகினர்.
இதைத் தொடர்ந்து மத்திய அரசு இன்று டெல்லியில் உள்ள பாகிஸ்தான் துணைத் தூதரை நேரில் அழைத்து எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் நடைபெற்ற இச்சம்பவத்துக்கு கடும் கண்டனமும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications