92 வயதுக் கணவர் காலையில் மரணம்.. 87 வயது மனைவி இரவில் மரணம்

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவையில் இணை பிரியாமல் 67 வருடங்களாக வாழ்ந்து வந்த கணவன், மனைவி ஒரே நாளில் அடுத்தடுத்து மரணமடைந்த சம்பவம் அப்பகுதியினரை நெகிழ வைத்து விட்டது.

கோவை சிங்காநல்லூர் வெள்ளலூர் பகுதியில்தான் இந்த துயரச் சம்பவம் நடந்துள்ளது.

இருவரும் கடந்த 67 ஆண்டுகளாக இணை பிரியாமல் ஒற்றுமையுடன், சந்தோஷமான தாம்பத்யத்தை நடத்தி வந்தவர்கள். இவர்களின் மரணம் அப்பகுதியினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

நாகராஜ ராவ்- சகுந்தலா பாய்

நாகராஜ ராவ்- சகுந்தலா பாய்

நாகராஜா ராவ். 92 வயதான இவரது மனைவி பெயர் சகுந்தலா பாய். இவருக்கு 87 வயதாகிறது. இவர்களுக்கு 2 மகன்கள். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்கள்.

2வது மகன் வீட்டில்

2வது மகன் வீட்டில்

நாகராஜ ராவும், மனைவியும் தங்களது 2வது மகன் ராஜேந்திரன் வீட்டில் வசித்து வந்தனர். 2 நாட்களுக்கு முன்பு நாகராஜ ராவ் காலையில் மரணமடைந்தார். இதையடுத்து இறுதிச் சடங்குக்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன.

சோகத்தில் சகுந்தலா பாய்

சோகத்தில் சகுந்தலா பாய்

கணவர் இறந்ததால் பெரும் சோகமும், வருத்தமும், அதிர்ச்சியும் அடைந்தார் சகுந்தலா பாய். அமைதியாக கணவர் உடல் அருகே அமர்ந்திருந்தார்.

நள்ளிரவில் மரணம்

நள்ளிரவில் மரணம்

இந்த நிலையில், நள்ளிரவு வாக்கில் சகுந்தலா பாய் மயக்க நிலையில் மரணமடைந்தார். இதனால் உறவினர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

இரு உடல்களும் ஒரே இடத்தில் தகனம்

இரு உடல்களும் ஒரே இடத்தில் தகனம்

இதையடுத்து கணவர், மனைவி ஆகிய இருவரின் உடல்களையும் ஒரே இடத்தி்ல தகனம் செய்ய முடிவெடுத்து அதனஅபடி செல்வபுரம் பகுதியில் மயானத்தில் உடல் தகனம் நடைபெற்றது.

கண்கள் தானம்

கண்கள் தானம்

நாகராஜ ராவின் கண்கள் இரண்டும் தானமாக அளிக்கப்பட்டன.

மாலையிடும் சொந்தம் ... முடி போட்ட பந்தம்.. பிரிவென்ற சொல்லே அறியாதது...!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+