தலைவா ரிலீஸ் ஆகும் தியேட்டர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்… போலீஸ் சோதனை
சென்னை: நடிகர் விஜய் நடித்துள்ள "தலைவா" படம் வெளியாக உள்ள சென்னை மல்ட்டி ப்ளக்ஸ் தியேட்டர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் விஜய் நடித்துள்ள "தலைவா" படம் வரும் 9ஆம் தேதி தமிழகம் மட்டுமல்லாது உலகம் முழுவதும் 2000 தியேட்டர்களில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில், சென்னை மயிலாப்பூரில் சிட்டி சென்டர் காம்ப்ளக்ஸ் உள்ள ஐநாக்ஸ் தியேட்டருக்கு தமிழ்நாடு ஒடுக்கப்பட்ட மாணவர் புரட்சிப் படை என்ற பெயரில் ஒரு கடிதம் வந்துள்ளது. அந்த கடிதத்தில், "தலைவா" படத்தை திரையிட்டால் ஐநாக்ஸ் தியேட்டரில் குண்டு வெடிக்கும்" என்று கூறப்பட்டிருந்தது.

ரிசர்வேசன் நிறுத்தம்
"தலைவா" படத்துக்கு இன்று டிக்கெட் முன்பதிவு செய்வதாக அறிவிக்கப்பட்ட நிலையில், வெடி குண்டு மிரட்டல் காரணமாக முன்பதிவு நிறுத்தப்பட்டது. இதனால் டிக்கெட் முன்பதிவு செய்ய வந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

வெடிகுண்டு சோதனை
இது குறித்து, தியேட்டர் மானேஜர் விக்னேஷ் மயிலாப்பூர் போலீசில் புகார் செய்தார். இந்த புகாரின் பேரில், போலீஸார் மோப்ப நாய்கள், வெடிகுண்டு நிபுணர்களுடன் சென்று சோதனை மேற்கொண்டனர்.

9 தியேட்டர்களுக்கு
இதேபோல சென்னையில் தலைவா படம் ரிலீசாக உள்ள வண்ணாரப்பேட்டை மகாராணி, புரசைவாக்கம் அபிராமி மெகா மால், சத்யம், தேவி, மாயாஜால், பாரத், ஜி.வி.ஆர்., ஏ.ஜி.எஸ். ஆகிய தியேட்டர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்து இருப்பதாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

நேரிலும் மிரட்டல்
சில தியேட்டர்களுக்கு போன் மூலமும், சில தியேட்டர்களுக்கு காரில் வந்த சிலரும் மிரட்டல் விடுத்ததாக போலீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலீஸ் பாதுகாப்பு
வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ள 9 தியேட்டர்களுக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அனைவரின் கை பைகளும் சோதனை செய்யப்படுகின்றன. அதன்பின்னரே காம்ப்ளக்ஸ்க்குள் அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் விஜய் ரசிகர்களும், தியேட்டர் அதிபர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
-
விஜய் ஜெயிச்சு ஒரு மாசம் ஆச்சு.. இன்னும் CM ஸ்டாலின் தானா? போலீஸ் செய்த பெரும் பிழை! கொந்தளித்த தவெக -
Perambur Power Cut: பவர் இல்லை சிஎம்! பெரம்பூர் பகுதியில் 3 நாட்களாக தொடர் மின்வெட்டு! தூக்கத்தை தொலைத்த மக்கள் -
முதல்வர் விஜய் போட்ட அதிரடி உத்தரவு.. தமிழ்நாடு முழுக்க போன ஆர்டர்.. கிராமங்களுக்கு விடிவுகாலம்! -
இவ்வளவு ஆதரிச்சதே அதிகம்.. இன்னும் கொஞ்சம் வேணுமாம்! அரசியல் பேரிடர்.. விஜய்யை இறங்கி அடித்த சீமான் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
விஜய் Vs உதய் Vs அண்ணாமலை? திராவிடக் கடப்பாரைகளை வளைத்த Gen Z! இளைஞர்களால் மாறும் அரசியல் களம்! -
ஆதவ் அர்ஜுனா சொன்னது நடக்குதா? ஈபிஎஸ் தலையில் இடிப்போல் இறங்கிய செய்தி.. அதிமுக எதிர்காலம்? -
மாறுவேடத்தில் நள்ளிரவு ரவுண்ட்ஸ் போகிறாரா முதல்வர் விஜய்? தவெக ஆனந்த்ஜீத் உடைத்த அதிரடி ரகசியம்! -
டாஸ்மாக் கடையை மூட மறுக்கும் விஜய் அரசு.. களத்தில் குதித்த தூத்துக்குடி மக்கள்! ரொம்ப தப்புங்க! -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
இசக்கி சுப்பையா டூ கடம்பூர் ராஜு.. இதுவரை எத்தனை அதிமுக மாஜி அமைச்சர்கள் தவெகவில் ஐக்கியம்! லிஸ்ட் -
வந்தே மாதரம் பாடல் விவகாரம்.. மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராக வழக்கு தொடர ஐகோர்ட் அனுமதி!












Click it and Unblock the Notifications