இதல்லவோ மனிதாபிமானம்.. மத நல்லிணக்கம்.. ப்ளீஸ் இதை கண்டிப்பாக படிக்கவும்!
பெங்களூர்: மதங்களின் பெயரை சக மனிதர்களை மாய்த்துக் கொள்ளத் துடிக்கும் கும்பல்களுக்கு மத்தியில் மத சிந்தனைகளை தூக்கி எறிந்துவிட்டு மனிதாபிமானத்துடன் சிறுநீரக தானம் கொடுத்தவர்களைப் பற்றிய நெகிழ்வான செய்திதான் இது..
பெங்களூரைச் சேர்ந்த விஸ்வநாதா பட்டா என்பவர் கடந்த 2 ஆண்டுகளாக சிறுநீரக பிரச்சனையால் டயாலிஸ் செய்து வருகிறார்..அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. அவரது மனைவி உஷா தமது சிறுநீரகங்களில் ஒன்றை கணவருக்காக கொடுக்க முன்வந்தார். ஆனால் இருவரது ரத்த மாதிரியும் ஒன்றாக இல்லாததால் சிறுநீரகம் பொருத்தமுடியவில்லை.
இதேபோல் பெங்களூரைச் சேர்ந்த 60 வயதான அப்துல் கலீல் என்பவரும் கடந்த 18 மாதங்களாக சிறுநீரக பிரச்சனையால் அவதிப்பட்டார். அவரது மனைவி அபிதா கலீலும் தமது சிறுநீரகத்தை கணவருக்கு தானமாக கொடுக்க முன்வந்தார். ஆனால் அபிதாவின் ரத்த மாதிரியும் கணவரின் ரத்த மாதிரியும் ஒன்றாக இல்லாததால் சிறுநீரகம் பொருத்தப்படவில்லை.

இதைத் தொடர்ந்து இரு தம்பதயினரும் பெங்களூர் நாராயணா இருதயாலாயா மருத்துவமனையை நாடினர். இதில்தான் அந்த அதிசயம் நிகழ்ந்தது.
ஹிந்துவான விஸ்வநாதா பட்டாவின் ரத்த மாதிரியும் இஸ்லாமியரான அபீதா கலீலின் ரத்த மாதிரியும் ஒன்றாக இருந்தது. இதேபோல் அப்துல் கலீலின் ரத்த மாதிரியும் உஷாவின் ரத்த மாதிரியும் ஒன்றாக இருந்தது.
இந்த இரு தம்பதியினருமே மதங்களைப் பற்றி சிந்திக்காமல் மனித உயிர்களை மதித்து சிறுநீர தானங்களுக்கு முன்வந்தனர். இதனால் விஸ்வநாத்துக்கும் அப்துல் கலீலுக்கும் 'வெற்றிகரமாக' சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இப்போது இந்த தம்பதியினர் ஹிந்துவாக, இஸ்லாமியராக இல்லை.. மதங்கடந்த மனிதர்கள்....
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications