மோடியை சந்தித்த அக்ஷய் குமார், நடிகர் பாரேஷ் ராவல்!
காந்திநகர்: பாலிவுட் நடிகர்கள் அக்ஷய் குமாரும், பாரேஷ் ராவலும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினர்.
பாலிவுட் நடிகர்கள் அக்ஷய் குமார் மற்றும் பாரேஷ் ராவல் ஆகியோர் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை நேற்று காந்திநகரில் சந்தித்து பேசினர். அப்போது அவர்கள் குஜராத்தில் விளையாட்டு மற்றும் இளைஞர்களின் முன்னேற்றத்திற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மோடியுடன் பேசினர்.
இதில் ராவல் குஜராத்தியர் என்பது குறிப்பிடத்தக்கது.

விளையாட்டு பல்கலைக்கழகம்
குஜராத்தில் விளையாட்டுக்கென்று தனியாக ஒரு பல்கலைக்கழகத்தை அமைக்க வேண்டும் என்று அக்கியும், ராவலும் கோரிக்கை விடுத்தனர். அந்த பல்கலைக்கழகத்தை அமைக்க உதவுவதாக அவர்கள் மோடியிடம் தெரிவித்தனர்.

ஜூடோ, கராத்தே
ஜூடோ, கராத்தே போன்ற கலைகளை மேம்படுத்த உதவுவதாகவும் அக்ஷய் குமாரும், ராவலும் மோடியிடம் தெரிவித்தனர்.

தற்காப்பு கலைகள்
குஜராத் பள்ளிகளில் தற்காப்பு கலைகளை கற்றுக்கொடுப்பது தொடர்பாக அக்கியும், ராவலும் ஏற்கனவே மோடியை சந்தித்தனர். அவரும் அவர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமித் ஷா
கடந்த டிசம்பர் மாதம் அகமதாபாத்தில் உள்ள சர்தார் பட்டேல் அரங்கில் இந்தியா, பாகிஸ்தான் இடையே நடந்த டி20 கிரிக்கெட் போட்டியை ராவல் பாஜக தலைவர் அமித் ஷாவுடன் அமர்ந்து பார்த்தார்.












Click it and Unblock the Notifications