3 நாளில் 3 விதமான அந்தர்பல்டி அறிக்கை கொடுத்த அந்தோணி!!
டெல்லி: ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தானின் தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் பலியான சம்பவம் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோணி 3 நாட்களில் 3 விதமான அறிக்கைகளை வெளியிட்டிருக்கிறார்.
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டு அருகே ராணுவ வீரர்கள் 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நாடாளுமன்றத்தை மூன்று நாட்களாக முடக்கி வைத்திருக்கிறது. இதற்கு காரணம் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணிதான்.
பாகிஸ்தானுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், பாகிஸ்தானுடனான அனைத்து உறவுகளையும் துண்டிக்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தி வருகிறது. அத்துடன் அந்தோணியின் முரண்பட்ட அறிக்கையையும் மிகக் கடுமையாக எதிர்த்து திரும்பப் பெற வைத்திருக்கிறது.
அந்தோணியின் அந்தர்பல்டி அறிக்கைகள் இதோ:

பாக்.. தீவிரவாதிகளே...
முதல் நாளில் ஏ.கே. அந்தோணி ராஜ்யசபாவில் தாக்கல் செய்த அறிக்கையில், கன ரக ஆயுதங்களுடன் பாகிஸ்தான் ராணுவ சீருடை அணிந்த 20 தீவிரவாதிகள் தாக்குதலை நடத்தினர் என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால் ராணுவமோ பாகிஸ்தான் ராணுவமும் அவர்களுடன் இருந்த தீவிரவாதிகளும் தாக்குதல் நடத்தியதாக குறிப்பிட்டது. இதனால் அந்தோணி வீடு முற்றுகையிடப்பட்டது. மறுநாள் அந்தோணி மன்னிப்பு கேட்கக் கோரி நாடாளுமன்றமே முடக்கப்பட்டது.

எனக்கு கிடைச்ச தகவல்கள்
இந்த பஞ்சாயத்துக்கு முடிவு கட்டும் வகையில் நேற்று மீண்டும் நாடாளுமன்றத்தில் ஒரு அறிக்கையைத் தாக்கல் செய்தார் ஏ.கே. அந்தோணி. அதில், எனக்குக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் நேற்று நான் அறிக்கை தாக்கல் செய்தேன். தற்போது ராணுவ தலைமை தளபதி ஜம்மு காஷ்மீர் சென்றுள்ளார். அவர் ராணுவ வீரர்களிடம் விவரங்களைக் கேட்டறிந்து சொல்வார். அந்த தகவல்களை நாடாளுமன்றத்தில் தெரிவிக்கிறேன் என்று ஒரு பல்டி அடித்தார்.

பாக். ராணுவ சிறப்பு பிரிவே...
இந்த இரு அறிக்கைகளுக்கும் எதிராக அந்தர்பல்டியாக இன்று லோக்சபாவில் ஏ.கே. அந்தோணி அறிக்கை தாக்கல் செய்தார். அதில், எல்லையில் நடந்த தாக்குதல் தொடர்பாக ராணுவத்தினர் அளித்த தகவலின் அடிப்டையில் தெரிவித்தேன். இந்நிலையில் இந்த தாக்குதலில் பாகிஸ்தான் படையினரின் சிறப்பு பிரிவினர் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. பாகிஸ்தான் படையினரே இந்த சம்பத்திற்கு பொறுப்பு. இப்போதைய சம்பவத்துக்கு இந்தியா தமது கண்டனத்தை தெரிவித்து கொள்கிறது. நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் இந்தியா சமரசம் செய்து கொள்ளாது.
இந்த சம்பவத்தில் ஈடுபட்டோர் மீது பாகிஸ்தான் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

சொந்த ஊர்களில் சுட்டுக் கொல்லப்பட்ட ராணுவ வீரர்களின் உடல்கள் தகனம்
இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்ட இந்திய ராணுவ வீரர்களின் உடல்கள் சொந்த ஊர்களில் முழு ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டன.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பூஞ்ச் பகுதியில் நேற்று முன்தினம் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் 5 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இதில் விஜே ராய், சாம்பு சரன் சிங், பிரேம்நாத் சிங், ரகுநந்தன் ஆகியோர் பிகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள். பலியானவர்களின் உடல்களுக்கு நேற்று டெல்லி பாலம் விமானப்படை நிலையத்தில் இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.
பின்னர் அவர்களது உடல்கள் சொந்த மாநிலமான பிகாருக்கு கொண்டு செல்லப்பட்டன. பாட்னா விமான நிலையத்தில் நேற்று இரவு 10 மணியளவில் வந்தடைந்த ராணுவ வீரர்களின் உடல்களை பெற்றுக்கொண்ட அரசு அதிகாரிகள் அவர்களது உடல்களை சொந்த ஊருக்கு ராணுவ வாகனம் மூலம் கொண்டு சென்றனர். பின்னர் வீரர்களின் உடல்கள் ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டன.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் சி. ஜோசப் விஜய்.. 2 தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர்!












Click it and Unblock the Notifications