மோடியின் ஹைதராபாத் வருகைக்கு தடை கோரிய மனு தள்ளுபடி!
Subscribe to Oneindia Tamil

பாரதிய ஜனதா கட்சியின் லோக்சபா தேர்தலுக்கான பிரசாரக் குழு தலைவராக மோடி நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து பல மாநிலங்களுக்கு அவர் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். தகவல் தொழில்நுட்பத் துறையில் உள்ள இளைஞர்களைக் கவருவதற்காக ஹைதராபாத்தில் வரும் 11-ந் தேதியன்று பிரம்மாண்ட பொதுக்கூட்டத்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வோரிடம் ரூ5ம் கட்டணம் வசூலிக்கப்பட்டு அதுவும் சர்ச்சையானது. இந்நிலையில் மஜ்லிஸ் கட்சி வழக்கறிஞர்கள் ஆந்திரா உயர்நீதிமன்றத்தில் மோடியின் ஹைதராபாத் வருகைக்கு தடை கோரி மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
இம்மனுவை விசாரித்த நீதிமன்றம் ஹைதராபாத்துக்கு மோடி வருவதைத் தடை செய்ய முடியாது என்று கூறி மஜ்லிஸ் வழக்கறிஞர்கள் மனுவை ஆந்திரா உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.












Click it and Unblock the Notifications