பாகிஸ்தானிடம் மென்மை போக்கு: பிரதமரிடம் பாஜக அதிருப்தி
டெல்லி: இந்திய ராணுவ வீரர்கள் 5 பேர், கொல்லப்பட்டதில் பாகிஸ்தானுக்குள்ள தொடர்பு குறித்து விரிவான அறிக்கையை அரசு, நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் நேற்று பிரதமரைச் சந்தித்த, பாரதிய ஜனதா தலைவர்களிடம் இதற்கான உறுதிமொழி அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி, பாகிஸ்தான் ராணுவ வீரர்களின் சீருடையை அணிந்தவர்களுடன் வந்த 20 க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியாக நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். இதற்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் மூத்தத் தலைவர்களான அத்வானி, ராஜ்நாத் சிங், சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜெட்லி ஆகியோர் நேற்று பிரதமரைச் சந்தித்தனர். அப்போது, பாதுகாப்புத்துறை அமைச்சர் அந்தோணி நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்துக்களுக்கு அவர்கள் தங்களது அதிருப்தியை பிரதமரிடம் தெரிவித்ததோடு, மிக மோசமான சம்பவம் நடந்துள்ளபோதிலும், பாகிஸ்தானிடம் மென்மை காட்டுவது ஏன் என கேள்வி எழுப்பினர்.
இந்த தாக்குதலை பாகிஸ்தானின் எல்லை பாதுகாப்புப் படை நடத்தியதாக பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ள நிலையில், அமைச்சரின் அறிக்கை அதற்கு முரணாக இருப்பதாகவும் அவர்கள் பிரதமரிடம் குறிப்பிட்டனர்.
-
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications