ஸ்டெர்லைட் ஆலை இயங்க தடை இல்லை: 2 மாதத்திற்கு ஒருமுறை ஆய்வு செய்ய வேண்டும்

ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு நச்சு வாயு வெளியேறியதை அடுத்து தூத்துக்குடி நகர மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து ஆலையை மூடக் கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, ஆலைக்கு தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மூடி சீல்வைத்தது.
இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், ஸ்டெர்லைட் ஆலை இயங்க தேசிய பசுமை தீர்ப்பாயம் இடைக்கால அனுமதி அளித்தது. இருந்தாலும் இறுதி தீர்ப்பு அளிக்கப்படாமல் இருந்தது.
இந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து இயங்க தேசிய பசுமை தீர்ப்பாயம் இன்று இறுதி தீர்ப்பளித்துள்ளது.
ஏற்கனவே தீர்ப்பாயம் வழங்கிய 20 பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பளித்துள்ளது.
ஏற்கனவே அமைக்கப்பட்ட 4 பேர் கொண்ட குழு ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு நடத்தி 2 மாதத்திற்கு ஒருமுறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் இந்த அறிக்கையை தேசிய பசுமை தீர்ப்பாயத்திலும், தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடமும் அறிக்கை வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. வாயுக்கசிவு ஸ்டெர்லைட் ஆலையில் இருந்துதான் வெளிப்பட்டது என்பதற்கு ஆதாரமில்லை என்று தீர்ப்பாயம் கூறியுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications