For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'வெற்றிகரமாக' 4வது நாள்... 'வெற்றிகரமாக' 4வது நாள்... 'வெற்றிகரமாக' 4வது நாள்...

By Mathi
Google Oneindia Tamil News

Parilament adjourned till noon
டெல்லி: தெலுங்கானா மற்றும் எல்லைப் படுகொலை தொடர்பான ஏ.கே. அந்தோணியின் அறிக்கையால் இன்றும் 4வது நாளாக நாடாளுமன்ற இரு சபை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.

நடப்பு மழைக்கால கூட்டத் தொடர் ஆகஸ்ட் 5-ந் தேதி தொடங்கியது. ஆனால் ஒருநாள் கூட எந்த ஒரு சபையும் முழுமையாக இயங்கியது இல்லை.

தெலுங்கானா விவகாரம், தனி மாநில கோரிக்கைகளுக்காககவும் ஜம்மு காஷ்மீரில் இந்திய ராணுவ வீரர்கள் 5 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்காகவும் நாடாளுமன்றம் முடங்கியது. நேற்று பாகிஸ்தான் தீவிரவாதிகள்தான் சுட்டுக் கொன்றார்கள் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி அறிக்கை வாசித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றம் முடக்கப்பட்டது.

இந்த விவகாரத்தில் அந்தோணி இன்று புதிய அறிக்கை தாக்கல் செய்வார் என உறுதியளிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று நாடாளுமன்றம் கூடியது. லோக்சபாவில் ஒருங்கிணைந்த ஆந்திராவை வலியுறுத்தி அம்மாநில எம்.பிக்கள் முழக்கமிட்டு அமளியில் ஈடுபட்டனர். தெலுங்குதேசம் கட்சி எம்.பிக்கள் ஆந்திராவை பிரிக்க எதிர்ப்பு தெரிவித்து வாயில் கறுப்புத் துணி கட்டி முழக்கம் எழுப்பினர். இதனால் அவை முதலில் 12 மணிவரையிலும் பின்னர் 2 மணிவரரயிலும் ஒத்திவைக்கப்பட்டது.

ராஜ்யசபாவில் இடையூறு செய்ததாக பாஜக எம்.பிக்கள் பெயர் குறிப்பிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர். இருப்பினும் கூச்சல் குழப்பம் எழுப்பியதால் சபை நடவடிக்கைகள் முதலில் 12 மணிவரையிலும் பின்பு 2 மணிவரையிலும் ஒத்திவைக்கப்பட்டன.

பின்னர் 2 மணிக்கு சபை கூடியபோதும் அமளி நீடித்ததால் லோக்சபா நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

English summary
The Monsoon Session of Parliament on Thursday witnessed uproar on various issues ranging from Telangana statehood to Defence Minister AK Antony's statement on the killing of five soldier along the Line of Control in Poonch sector of Jammu and Kashmir.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X