ஆஷிஷ்குமார் டிரான்ஸ்பர்: விஜயகாந்த், ராமதாஸ் அரசுக்கு எதிர்ப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: மணல் கொள்ளையை மக்களிடம் வெளிச்சம் போட்டு காட்டிய சமூக விரோத கும்பலுக்கு அரசு துணை போகிறது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த், பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். தூத்துக்குடி மாவட்ட கலெக்டரின் துணிச்சலான நடவடிக்கைக்கு டிரான்ஸ்பர்தான் பரிசாக வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

இது குறித்து விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

கடந்த திங்கட்கிழமை நாடு முழுவதும் மத்திய அரசின் முன் அனுமதி இல்லாமல் நதிப் படுகைகள், ஆறுகள், கடலோரப் பகுதிகள் போன்றவற்றில் இருந்து மணல் எடுப்பதை தடை செய்து தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்தது.

சுற்றுச்சூழல் அனுமதி

சுற்றுச்சூழல் அனுமதி

சுற்றுச்சூழல் துறையின் அனுமதி பெற்ற பிறகே மேற்கூறிய பகுதிகளில் இருந்து மணல் எடுக்க முடியும். இந்த தடை ஆணையை பிறப்பிப்பதற்கு காரணமாக இருந்தது உத்தர பிரதேசத்தில் நடந்த ஒரு சம்பவம்தான். அங்கு துர்கா சக்தி நாக்பால் என்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி மணல் கொள்ளையை தடுக்க நடவடிக்கை எடுத்தபோது, அந்த அரசால் தற்காலிக பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

மணல் கொள்ளையர்கள்

மணல் கொள்ளையர்கள்

மணல் கொள்ளைக்காரர்கள் ஒரு மாநில அரசையே ஆட்டிப் படைக்கும் மகாசக்தி வாய்ந்தவர்கள் என்று இதனால் நிரூபிக்கப்பட்டது. இதன் விளைவாக நாடெங்கும் பொதுமக்கள் மத்தியிலும், அரசியல் கட்சிகளின் மத்தியிலும் பெரும் கொதிப்பு அலை எழுந்தது.

இப்படி இருந்தும், தமிழ்நாட்டில் இந்த தடை ஆணைக்கு பிறகும் கூட, மணல் கொள்ளைகள் நடந்த வண்ணம்தான் உள்ளன. இன்றைய பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் இதற்கான ஏராளமான சான்றுகள் வெளி வந்துள்ளன.ஒருபுறத்தில் மத்திய அரசின் ஆணை மணல் கொள்ளைக்காரர்களால் துச்சமாக மதிக்கப்படுகிறது. மறுபுறத்தில் மாநில அரசும் அதற்கு உடந்தையாக உள்ளதோ என்ற சந்தேகம் எழுகிறது.

உதாரணத்திற்கு, தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்றைய தினம் (06.08.2013) மாவட்ட ஆட்சித் தலைவர் ஆஷிஷ்குமார் மணல் கொள்ளை நடப்பதை தடுக்க அதிரடி சோதனைக்கு உத்தரவிட்டார்.

குறிப்பாக, வி.வி.மினரல்ஸ் கம்பெனி, பீச் மினரல்ஸ் கம்பெனி என்ற நிறுவனங்களில் இந்த சோதனை நடைபெற்றது. அதில் அரசு விதிமுறையை மீறி சுமார் 5 லட்சம் கனமீட்டர் மணல் அள்ளப்பட்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

50 ஏக்கர் நிலப்பரப்பு

50 ஏக்கர் நிலப்பரப்பு

சுமார் 10 ஏக்கர் நிலப்பரப்பில்தான் மணல் எடுக்க வேண்டும் என்ற அனுமதி பெற்று விட்டு, சுமார் 50 ஏக்கருக்கும் மேலான நிலப்பகுதியில் மணல் எடுத்துள்ளனர். மேலும் அரசு புறம்போக்கு நிலங்களில் அனுமதி பெறாமலே மணல் எடுக்கப்பட்டுள்ளது. இதுபோல் தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 8 குவாரிகளும், நெல்லை மாவட்டத்தில் 27 குவாரிகளும் அரசினுடைய விதிமுறைகளை மீறி செயல்படுவதாக தெரிகிறது.

சட்ட விரோதம்

சட்ட விரோதம்

இதை ஆய்வுக்கு சென்ற அரசு அதிகாரிகள் குழுவினர் அறிக்கையாக தாக்கல் செய்து 5 சட்டப் பிரிவுகளின் கீழ் அந்நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்துள்ளனர். சட்ட விரோதமாகவும், திருட்டுத்தனமாகவும் மணல் அள்ளியதாகவும், பொது சொத்தை அபகரித்ததாகவும், சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவித்ததாகவும் வழக்கு பதிவு செய்யப்பட உள்ளது என தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார்.

உடனடி டிரான்ஸ்பர்

உடனடி டிரான்ஸ்பர்

வி.வி. மினரல்ஸ் போன்ற அரசு விதிகளை மீறிய நிறுவனங்களில் ஆய்வுகள் நடைபெற்று முடிந்ததும், மாவட்ட ஆட்சித் தலைவருக்கு அதே நேரத்தில் மாற்றல் உத்தரவு தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.அவரை சத்துணவுத் துறையில் துணை செயலாளர் என்ற பதவியில் நியமித்துள்ளனர். சட்டத்தை மீறி செயல்பட்ட மணல் கம்பெனிகள் மீது நடவடிக்கை எடுத்த தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவரை பொறுத்த வரையில் அவருக்கு இது ஒரு அதிர்ச்சி. ஆனால் அதே நேரத்தில் சட்ட விரோத கும்பல்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவரின் மாற்றல் உத்தரவு அளவற்ற மகிழ்ச்சி.

நிர்வாக நெருக்கடி

நிர்வாக நெருக்கடி

அதிகாரிகளை மாற்றுவதற்கு மாநில அரசு உரிமை படைத்தது என்றாலும், மாற்றல் உத்தரவுகள் மக்களின் நலனை அடிப்படையாக கொண்டிருக்க வேண்டும். ஆனால் இந்த மாற்றல் உத்தரவு நேர்மாறான விளைவை தந்துள்ளது மட்டுல்ல, சட்ட விரோத கும்பல் மீது எந்த அதிகாரிகளும் இனிமேல் துணிந்து நடவடிக்கை எடுக்க இயலாத நிர்வாக நெருக்கடியை இது சுட்டிக்காட்டுகிறது.

கண்டிக்கத்தக்கது

கண்டிக்கத்தக்கது

எந்த சூழ்நிலையில் அரசு இந்த மாற்றல் முடிவை எடுத்தது என்பது நமக்கு தெரியாது. எனினும், இந்த மாற்றல் உத்தரவு வந்த நேரமும், சூழ்நிலையும் எவராலும் கண்டிக்கத்தக்கதாகும். நேர்மையாகவும், பாரபட்சம் இல்லாமலும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் செயல்படும் வகையில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கூறியுள்ளார்.

ராமதாஸ் கண்டனம்

ராமதாஸ் கண்டனம்

மாநிலத்தின் இயற்கை வளங்களை காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை விடுத்து முறைகேட்டினை கண்டறிந்த கலெக்டரை டிரான்ஸ்பர் செய்தது ஏன் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். கலெக்டரின் டிரான்ஸ்பர் உத்தரவை திரும்ப பெறவேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+