இதயம் நொறுங்கிவிட்டது... இந்திய ராணுவத்தினர் மரணத்திற்கு பாக் பாடகி வருத்தம்
டெல்லி: டெல்லி பாகிஸ்தான் வீரர்கள் இந்திய எல்லையில் நடத்திய தாக்குதலில் 5 இந்திய வீரர்கள் பலியானது பெரும் வருத்தம் தருகிறது. இந்த செயலுக்காக நான் வருத்தப்படுகிறேன் என்று கூறியுள்ளார் பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபலமான சுஃபி பாடகி சனம் மார்வி.
டெல்லியில் இசைக்கச்சேரியில் பங்கேற்க வந்திருந்தார் சனம். ஆனால் பாகிஸ்தான் வீரர்களின் திடீர் தாக்குதலால் ஏற்பட்ட சூழலால் அவரது நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து அவர் பாகிஸ்தான் திரும்பினார்.
இந்தநிலையில், தனது நாட்டு ராணுவத்தினர் நடத்திய தாக்குதலுக்கு சனம் வருத்தம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியுள்ளதாவது...

ஒரு தாயாக நான் வேதனைப்படுகிறேன்
இந்த தாக்குதலில் தங்களது பிள்ளைகளை இழந்து தவிக்கும் பெற்றோர்களின் வேதனையில் நானும் பங்கேற்கிறேன். ஒரு தாயாக அவர்களது வலியில் நானும் பங்கேற்கிறேன்.

பாட முடியவில்லை.. இதயம் வலிக்கிறது
என்னுடைய இதயம் வலிக்கிறது. இப்படிப்பட்ட சோகமான சூழலில் என்னால் பாட முடியாத நிலை.

மாபெரும் சோகம்
5 வீரர்களின் உயிரிழப்பு மிகப் பெரிய சோகம். நான் ஒரு தாய். ஒரு தாய்க்குத்தான் இன்னொரு தாயின் வலி, சோகம் புரியும். என் குழந்தைகள் கொல்லப்பட்டிருந்தால் எப்படித் துடிப்பேனோ, அப்படித்தான் அந்த ஐந்து வீரர்களின் தாயார்களின் உணர்வுகளையும் நான்புரிந்து கொண்டுள்ளேன்.

இதயம் நொறுங்கிப் போய் விட்டது
நான் இந்தியாவுக்கு இதுவரை 15, 16 முறை வந்துள்ளேன். ஆனால் இந்த முறை வந்தபோதுதான் எனது இதயமே நொறுங்கிப் போய் வலியுடன் திரும்பியுள்ளேன் என்றார் சனம்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications